புதன், 25 ஜனவரி, 2017

பாஜகவின் கூலி அரசாகிவிட்ட தமிழக அரசு ... மீனவர்கள் குப்பத்தில் நடத்திய வெறியாட்டம் . பிந்திய விடியோ பதிவு


போலீஸ் காக்கி சட்டையை போட்டாலும் கழற்றினாலும் அவர்கள் அதிமுகவின் அடியாட்களே
உடனே பரப்புங்கள்* சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தமிழக மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.. - நீதிபதி மஞ்சுளா அறிவிப்பு.. அவரது அலுவலக தொலைபேசி எண் : 24951492 Phone : 91-44-2495 1484 Fax : 91-44-2495 1486 E-mail : shrc@tn.nic.in தயங்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். காணொளி, படம், புகார் மனு எதுவாக இருந்தாலும் உடனடியாக அனுப்புங்கள்.
வழக்கமான பலி கொடுக்க சமூகம் தயாராகிவிட்டது. பழைய வழக்குகளை காரணம் சொல்லி, கைது செய்கிறார்கள். படிக்கிற பசங்க அடி வாங்க கூடாதுன்னு உயிரைக் கொடுத்து ஓடி வந்தான், நக்கிப் பிழைக்க ஆண்ட பரம்பரைப் பெருமை பேசும் பிணந்திண்ணிக் கூட்டம் இன்னும் பாடம் எடுத்துட்டு இருக்கு. தலித்ன்னு சொல்ற வரை உதவ வர மாட்டானுங்களாம். நன்றி கெட்ட கூட்டம். நடுகுப்பம் வீடுகளில் ஆண்களை தேடிபிடித்து கைது செய்யும் காவல்துறை, இதுபோக அங்கிருந்த பெண்களிடமும் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளனர். இப்போது அங்கு ஒரு ஆண்கள் கூட இல்லை.

மீனவர்களுக்கும் சல்லிக்கட்டுக்கும் என்னய்யா சம்மந்தம். சென்னை பேரிடரின் போது பல லட்சம் உயிரை காப்பாற்றிய மீனவ தோழர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டாமா. இன்னும் எத்தனை கருமாந்திர நடவடிக்கைகள், சந்தேக கேச் என்ற பெயரிலான அராஜகங்கள் இந்த 26 ஆம் தேதிக்குள்.. நிர்பந்தத்தின் பெயரில் தேசிய கீதத்துக்கு நிற்க வைப்பதுபோல், குடியரசு தினத்தையும் நிர்பந்திக்கிறது அரசு.


மீனவன் சாவை ஆதரித்து ட்வீட் போடும்போது அதைக் கண்டித்த ஆட்களை எல்லாம் பொறுக்கி என்று முத்திரை குத்தினார்கள்.

இன்று வீடு புகுந்து அடிப்பது, வீட்டை வாகனத்தை எரிப்பது, கிழவிகளை தாக்குவது என்ற அளவில் வந்து நிற்கிறார்கள். விவசாயி, நெசவாளன், மீனவன்...இன்னும் யாரைத்தான் விட்டுவைக்கப்போகிறது இந்த அரசு?

 சல்லிக்கட்டின் ஆஸ்தான கதாநாயகர்களான பிஆர், கார்த்திகேய சேனாதிபதி, ராஜேஷ் போன்றவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா.....இல்லை சொல்வதற்கு இவர்களின் சாதி தடுக்கிறதா. அது என்ன இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் இன்னும் ஏன் குறி வைத்து தாக்குகிறார்கள். மயிலாப்பூர், நங்கநல்லூரில் இல்லாத சமூகவிரோதிகளா திருவல்லிக்கேணியிலும், நடுக்குப்பத்திலும் இருக்கிறார்கள். இப்போது வரை திருமாவளவனை தவிரை வேறு எந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவில்லை. ஓட்டு கேட்க மட்டும் போவார்கள்......ஓட்டு பொறுக்கிகள்
ஓட்டுகேட்க வா செருப்பு தொடப்பக்கட்ட ரெடியா இருக்கு” பெண் ஆவேசம் இந்த பெண்ணின் மன நிலைதான் இன்றைக்கு எல்லோரின் மனநிலையும்,

 உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. அதில் நிச்சயம் இந்த கோபம் பிரதிபளிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டில் நடந்த அதிசயம் இந்த முறை தேர்தலிலும் நடக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் ஆசை!  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: