சனி, 28 ஜனவரி, 2017

பன்னீர்செல்வமே உங்களை விமரிசிக்கவே கூடாதா? பாரதிராஜா

மெரினாவில் போராடுவதற்கு ரொம்ப வருசமா தடையிருக்கிறது.; அதற்கு முன்னால் பன்னீர் அரசு ஒன்றை தெளிவுபடுத்தனும். சென்றவாரம் நடந்த 7நாள் போராட்டத்திற்கு யார் எந்த அமைப்பு என்ன விசயத்திற்காக அனுமதி கேட்டார்கள். இதற்கு காவல்துறை அனுமதியளித்ததா இல்லையா. அனுமதியில்லையென்றால் அது சட்டமீறல்தானே. மெரினாவில் இதற்கு முன்னால் ஈழ பிரச்சினைக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக நம் தோழர்கள் மீது போலீஸ் வழக்கு தொடுத்துள்ளது. ஆக இந்த போராட்டத்துக்கு மட்டும் எப்படி 6நாள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.?  அதுவும் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தான் மெரினாவில் போராட வேண்டும் என்ற விதி ஏதும் உள்ளதா மற்றும் மோடி ஓபிஎஸ் ஆகியோரை எதிர்த்தும் தமிழ் தேசிய கருத்தியலை பேசக்கூடாது என்ற சட்டவிதி ஏதும் உள்ளதா.? ;இவைகளை கொஞ்சம் விளக்கவும் பன்னீர் அவர்களே…நன்றி பாரதிராஜா( டைரக்டர்)லைவ்டே

கருத்துகள் இல்லை: