வெள்ளி, 27 ஜனவரி, 2017

கருப்பு பூனைப் படையின் அணிவகுப்பு! இவிங்கலும் அப்படியே தீவிரவாதிங்க மாதிரியே உடுத்திக்கிராய்ங்க?


புதுடெல்லி ராஜபாதையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக கருப்பு பூனைப் படைப்பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர்.
நாட்டின் 68-வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், அபுதாபி இளவரசரும் குதிரைப் படை அணிவகுக்க ஒரே காரில் விழா மேடைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் பீரங்கி குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான சிறப்பு விருதுகளை வழங்கினார். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருது, அசாமைச் சேர்ந்த ஹவில்தார் ஹங்பான் தாதாவுக்கு வழங்கப்பட்டது. விருதினை அவரது மனைவி சேசன் லோவாங் தாதாவிடம், குடியரசு தலைவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து முப்படைகளின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற பிரம்மாண்ட அணி வகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றார். அதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அனைத்து, மாநிலங்களும் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களுடன் அலங்கார அணிவகுப்பை நடத்தின. அதேபோல், இந்தமுறை முப்படை வீரர்களின் அணிவகுப்புடன், முதன் முறையாக தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை அணிவகுப்பு இடம்பெற்றது. அதில், 140 வீரர்கள் தங்களது கைகளில் எம்பி-5 சிறப்பு ரக ரைபிள்களுடன் மிடுக்காக அணிவகுத்தனர்.
மேலும், தீவிரவாதிகளுடன் மோதும்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வாகனத்தையும் குடியரசு தின அணிவகுப்பில் அனைவரும் பிரமிக்கும் வகையில் கொண்டு சென்றனர். இவர்களின் இந்த முதல் அணிவகுப்பு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கரகோஷத்தை எழுப்பியது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தான் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் பாதுகாப்பு படையின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: