வியாழன், 26 ஜனவரி, 2017

இனி எல்லா பிரச்சனைகளுக்கும் போராடுவோம் ... ஜல்லிகட்டு மட்டும்தான் என்று எண்ணுபவர்கள் ஒதுங்குங்க?

palai.karthi மனிதநேயம் உள்ளவர்களுக்கு தான் சகமனிதனின் வலியை உணர முடியும் அருமையான பதிவு அடடா உங்களுக்கெல்லாம் கண், காது, வாய் எல்லாமே இப்போ நல்லாதான்யா செயல்படுது..
பரமக்குடியில அவர்களே தீவைத்து கொளுத்திவிட்டு, கலவரம் செய்ததால் சுட்டதாக கதை சொல்கிறார்கள் என்றோம்..
அதெப்பிடிடா சும்மா இருக்கும்போது போலீசு சுடும் என்று கேட்டீங்க..
கூலி உயர்வு கேட்டு ஊர்வலம் போன 17 தொழிலாளர்களை தாமிரபரணி ஆத்துல கொன்னு வீசுனானுங்கனு கதறுனோம். பொம்பள போலீசை சீண்டுனா அடிக்கதான் செய்வாங்க. இவனுங்களே அடிக்கு பயந்து ஆத்துல குதிச்சிட்டு போலீசை குறை சொல்றானுங்க என்று போலீசின் கதையையே நீங்களும் ஒப்பிச்சீங்க..
ராம்குமார் அப்பாவிடானு சொன்னோம். அதெப்பிடி போலீசு பொய் சொல்லும்னு கேட்டீங்க.
ராம்குமாரை இவனுங்களே கொன்னுட்டானுங்கடானு சொன்னோம். பக்கி கரண்டு கம்பியை போய் கடிச்சிருக்கு பாத்தியானு நக்கல் பு......யா பேசினீங்க.
இன்னும் நிறைய கதை இருக்கு..

தர்மபுரியில் ஒரு கிராமத்தின் அத்தனை வீடுகளும் சூறையாடப்பட்டபோது ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைதியா நின்னுகிட்டு கலவரம் சிறப்பா நடக்க அனுமதிச்சதே இந்த காவல்துறைதான் என்று சொன்னபோது, நவ துவாரத்தையும் இறுக்கமா மூடிகிட்டு மனசுக்குள்ள சிரிச்சீங்க.
சமூகத்தில் அநீதி நடப்பதற்கு தீயவர்கள் மட்டும் காரணமில்லை, தீமையை வேடிக்கை பார்ப்பவர்களும்தான் காரணம் என்று ஷேக்ஸ்பியர் சொன்னாராம்.
அடேய் நாங்க ஈழப் படுகொலையின்போது போராடாமல் வேடிக்கை பாக்கல. மீனவர் பிரச்சனையை பேசாம பொத்திக்கிட்டு கிடக்கல. அணுவுலை போராட்டத்தின்போது ஜடம் மாதிரி கிடக்கல. விவசாயிகளுக்காக உணர்வை வெளிப்படுத்தாம நன்றி கெட்டத்தனமா நடந்துக்கல..
அதுக்காக எங்க பிரச்சனைக்காக நீங்க வந்து பேசுங்கனு நாங்க கேக்கல.. எங்க ஆணியை எப்படி புடுங்கனும்னு எங்களுக்கே தெரியும். ஆனா அய்யயோ அநியாயம்னு அலறுவதற்கு கூட அநியாயம் செய்யாத, அநியாயத்தை வேடிக்கை பாக்காத ஒரு தகுதி வேணும். அது உங்களுக்கு இருக்கா என்றுதான் புதுசா பொங்க சோறு வைக்கிற எல்லோரையும் கேக்குறேன்.
இதை போராட்ட களத்துல இருக்கிறவன்கிட்ட கேக்கல.. எப்போ அவன்மேல அடி விழுந்துச்சோ அப்பவே அவன் எங்க அண்ணன் தம்பியா மாறிட்டான். இப்போதுகூட நீங்க நாங்கனு பிரிச்சு பேசும்படியா என்னை மாத்துனது நீங்கதான்டா..
இப்போ இன்னிக்கு காட்டினான் பாத்தியா? வாகனங்களே அவனுங்களே கொளுத்தி, அவனுங்களே உடைத்து பரமக்குடியில் இப்படிதான் செஞ்சோம், தாமிரபரணியில் இப்படிதான் தாக்கினோம் என்று உனக்கு படம்போட்டு காட்டினான் பாத்தியா?
நேத்துவரை இந்த போராட்டத்தை ஒரு கொண்டாட்டமா செல்பி எடுத்து விளையாடிக்கிட்ட இளசுகளும், கோசம்போடும்போது கூட அழகான பாடிலாங்குவேஜ் மெயிண்டெய்ன் பண்ணிகிட்டே கோசம்போட்ட ஹை லெவல் பீசுகளும் கலைஞ்சி போய்ட்ட பிறகு எங்க குப்பத்து ஆண், பெண்களும் மீனவர் தோழர்களும் கடினமான சூழல்னு தெரிஞ்சி களத்துக்கு வந்து சேர்ந்தான் பாரு.. அதான்யா காலகாலமா போராடுறவனோட தராதரம்..
இன்னைக்குக்கூட உங்க மண்டையை பொளந்ததோட நிக்காம, உங்க வசதிக்காக நீங்க செஞ்ச போராட்டத்தை பயன்படுத்தி ரூதர்பரம் சேரியை சூறையாடி அங்கே தவனையில வாங்கப்பட்ட ஏழைகளின் வாகனங்களை கொளுத்திட்டு போயிருக்கான்டா உங்க போலீசு..
இன்னைக்கு நடந்த இந்த நிகழ்வுகளில் உனக்கு சொரனை வந்தா இனி எல்லா பிரச்சனைகளையும் நாம சேர்ந்தே பேசுவோம் வா.. இதுலயும் நீ திருந்தாம செலக்டிவ் அம்னீசியா பாதிக்கப்பட்டவன் மாதிரி உன்னோட வசதிக்கேற்ப பிரச்சனையை தேர்ந்தெடுத்துதான் பேசுவேனு சொன்னா, எங்க வாயில வார்த்தை வராது எச்சிதான் வரும். காறி மூஞ்சில துப்பிடுவோம்.
பட்ட காயத்திலேயே மறுபடியும் குத்திக்காட்டுறோம்னு யாராவது நினைச்சா நட்பை விட்டே போய்டுங்க. நாங்க ஒட்டுமொத்த சமூக மாற்றத்துக்கான உளவியல் சிகிச்சையைதான் செய்றோம்னு புரிஞ்சவங்க மட்டும் கூட இருந்தா போதும்..
- மு.ரா.பேரறிவாளன்.   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: