தமிழக
அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவந்தும் போராட்டங்கள்
தொடர்வதால் தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவை
உறுப்பினரும் பாஜக தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டால், அரசை கலைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். மேலும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது டிவிட்டர் பக்கம் மூலம் தொடர்ந்து இழிவாக விமர்சித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்ததை தொடர்ந்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது போராட்டங்களை கைவிடவில்லை. எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக