புதன், 25 ஜனவரி, 2017

கமலஹாசன்: ஹிந்தி எதிர்ப்பு போரின் போது சூடுபட்ட பின்பும் மீண்டும் போராடவந்தார்கள் .. அப்படி இனியும் வருவார்கள்!முகநூல் பதிவுகள் : தாமரை : மக்களே ! நீங்கள் தேர்ந்தெடுத்த அரசுதான் உங்களை அடிக்கிறது அனுபவியுங்கள். மீனவர்கள் செய்த பெருங்குற்றம் அரசு அடியாள் போலீசிடமிருந்து மாணவர்களை காப்பாற்றியது.. அதற்குதான் போலீஸ் குப்பத்துக்குள் புகுந்து மீனவர்களை குறி வைக்கிறது. சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது படகுகளுடன் பாய்ந்து வந்த அதே அன்புடன்தான் மாணவர்களை காப்பாற்றவும் ஓடி வந்தார்கள்.. அந்த அன்பு மனிதர்களுக்கு மட்டுமே புரியும்.. மனிதம் தொலைத்த அடியாட்களுக்கு அல்ல.. மீனவ மக்களுக்கு இந்த தருணத்தில் துணை நிற்பது ஜல்லிக்கட்டுக்காக களமிறங்கிய ஒவ்வொருவரின் கடமை.. இந்த சூழலில் அரசுக்காக கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு நடத்துவீர்கள் என்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை.. நேற்று மைலாப்பூரில் 23 குப்பத்து ஆண்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து தகவல் கேட்டோம் தர மறுத்து விட்டார்கள் .. அவர்களாக இந்த பிரச்சனைக்கு உள்ளே செல்லவில்லை . மாணவ மாணவிகள் தாக்கப்பட்டதும் #Instant #spot ஆதரவு மட்டுமில்லை உணவும் அளித்த மனித நேயத்துக்கு நன்றி கடனாக இன்று தனித்து விடப்பட்டு போலீஸ் தாக்குதலை வாங்கி கொண்டே இருக்கிறார்கள் இதை போலீஸ் முதலில் உணர்ந்து அவ்ரகளை விடுவிக்க வேண்டும் என்கிறார்கள்.. இந்த பிரச்சனைக்கு பிள்ளயார் சுழி போட்டதே போலீஸ் தான் .. ரெண்டு மணி நேரம் தானே கேட்டார்கள் மாணவர்கள் .. அதை கொடுக்க வேண்டாம் என்று சொன்னது யார் .. விடை தெரிய வேண்டும் என்கிறார்கள் .. அம்மீனவ குப்பத்தில் #அதிமுக கொடி பறக்க வைத்து ., அதிமுக வுக்கு ஒட்டு போட்டு MLA ஆக்கிய Ex Police DGP நட்ராஜ் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது வேதனை தருவதாக உள்ளது என்று அந்த நடுக்குப்பம் ., நொச்சிக்குப்பம் அயோத்திகுப்பம் மீனவ சமூகத்து மக்கள் தெரிவித்தார்கள்

கருத்துகள் இல்லை: