புதன், 25 ஜனவரி, 2017

அவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் – வீடியோ


நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பிணை பெற்று மீண்டு வருவார்கள். – பெண் ஒருவரின் குமுறல்
உலகம் உற்றுப் பார்த்த ஒரு போராட்டத்தை ரத்தகளறியில் அமித்திய இந்த காவல் துறையும் அரசும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம். நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பினை பெற்று மீண்டு வருவார்கள்.
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -வள்ளுவர்
பெண் ஒருவரின் குமுறலையும் கோபத்தையும் பாருங்கள் பகிருங்கள்.

இந்தப் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்று மாணவர் போராட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் (அதிமுக, பாஜக) கூறுகின்றனர். இருக்கட்டுமே. அந்தப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்மை. போலிஸ் அங்கே பெரும் வன்முறையை நிகழ்த்தியதும் உண்மை. நடுக்குப்பத்தில் போலீசிடம் அடிவாங்கி படுகாயமுற்று, உடமைகளை இழந்த மீனவப் பெண்களும், ஆண்களும் கூட சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் அவர்கள் இந்த வன்முறையையும், ஏவி விட்ட அதிமுக அரசையும் மன்னித்து விடுவார்களா என்ன?வினவு

கருத்துகள் இல்லை: