வெள்ளி, 27 ஜனவரி, 2017

மார்கண்டேய கட்ஜு : குடியரசு சுதந்திர தினங்கள் ஏன் கொண்டாடவேண்டும் ? இங்கு கொண்டாடுவதற்கு என்ன பெருமை இருக்கிறது?

What is there to celebrate about? has poverty been abolished in India? Has unemployment been abolished? No? Then what are the celebrations, parades and flag hoisting about?” he said. “I regard it as a cruel farce and an insult to my people to celebrate when over 75% of the 1.25 billion Indians are living in horrible poverty,” he wrote.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை எதற்காக கொண்டாட வேண்டும்? என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பதாவது:-
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாட என்ன காரணம் இருக்கிறது? இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? வேலையின்மை தீர்ந்து விட்டதா? நம் மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்கின்றார்களா, அவர்களுக்கு சுகாதாரம், சிறப்பான கல்வி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றதா?

எதுவுமே இல்லாத போது எதற்காக கொண்டாட வேண்டும்? அணிவகுப்பு மற்றும் கொடியேற்றுதல் உள்ளிட்டவை எதற்கு? ஒரு வேளை நம் நாட்டின் உச்சக்கட்ட வறுமை, ஏராளமானோருக்கு வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, எங்கும் ஊழல், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை கொண்டாடப்படுகின்றதா?
1.25 பில்லியன் இந்தியர்களில் 75 சதவிகிதம் பேர் கடுமையான வறுமை, பாதிக்கும் மேற்பட்ட நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, ஏராளமானோருக்கு வேலையின்மை பிரச்சனை, தரமான கல்வியில்லை, சுகாதார சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பிறக்கும் முன்பே பெண் சிசுக்கள் அழிக்கப்படுவது, வரதட்சணை கொடுமை, கவுரவ கொலை, தற்கொலை, ஊழல் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இவ்விழாக்கள் கொண்டாடப்படுவதை மரியாதைக் குறைவாகவே கருதுகிறேன்.
நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால் நான் இதில் கலந்து கொள்வேன் என எதிர்பார்க்காதீர்கள். இதனை நீங்கள் மறுக்கலாம், ஆனால் இது தான் உண்மை. அறிவுப்பூர்வமாக இந்தியா ஜொலிப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் என்னால் அப்படி பார்க்க முடியாது.
எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் தரமான வாழ்க்கையை வாழும் போது நான் குடியரசு மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுகிறேன். நான் இறந்த பின் இந்நிலை ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன், அப்போது வானத்தில் இருந்து எனது வாழ்த்துக்களை வழங்குகின்றேன். இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

1 கருத்து:

Unknown சொன்னது…

true sir,but you have to live long life