வியாழன், 11 டிசம்பர், 2025

ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான ‘இம்பீச்மெண்ட்’ நாடாளுமன்றத்தில்! பாஜக கடும் எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi :  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வருகிறார் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் மத மோதலுக்கான சூழலை உருவாக்கியது என்பதும் இந்தியா கூட்டணியின் விமர்சனம்.



இதனைத் தொடர்ந்து நீதிபதி பதவியில் இருந்து ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வகையில் நாடாளுமன்ற மக்களவையில் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை, இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்தனர்.

இது குறித்து மக்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாக்கு வங்கியை தக்க வைக்கவே இப்படி நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றனர். இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றார்.

கருத்துகள் இல்லை: