இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14 மசூதிகள் மீது ஆர் எஸ் எஸ் குறிவைத்துள்ளது
இதற்காக பெருமளவு நிதியை பஹாமாஸ் தீவில் பதுக்கி வைத்துள்ளது.
வழறிஞர் திரு வாஞ்சிநாதன் இது பற்றி மிக தெளிவாக விபரமாக எழுதி உள்ளார்.
அவரின் அந்த கட்டுரை உங்கள் தூக்கத்தை தொலைத்து விடும்
நிலவினியன் மாணிக்கம் : ஆர்எஸ்எஸ்ஸஸின் உண்மை முகம் மதக்கலவரத்தை தூண்டுவதை தோலுரித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
அனுப்புநர்
சே.வாஞ்சி நாதன்
வழக்கறிஞர்
384, கிழக்கு 8-வது தெரு
கே கே நகர்
மதுரை-20
9865348163
பெறுநர்
உயர்திரு.ஆய்வாளர் அவர்கள்
அண்ணாநகர் காவல் நிலையம்
மதுரை மாநகர்
அய்யா,
1.நான் மேலே கண்ட முகவரியில் அலுவலகம் வைத்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்களில் படித்துக் கொண்டிருந்தபோது,
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்தது.
Reclaim Temples (Reclaimtemples.com) என்ற பெயரிலான ஒரு வலைதளம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மசூதிகள், சர்ச்சுகளைப் பட்டியலிட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட மசூதிகள், இந்து கோவில்களை இடித்து கட்டப்பட்டது அல்லது கோயில்களின் பொருட்களால் கட்டப்பட்டவை என்று தலைப்பிட்டு வகைப்படுத்தியுள்ளது.
2.பட்டியலில் உள்ள மதவழிபாட்டுத் தளங்களை மீட்க வேண்டும் என்பதுதான் reclaim என்பதன் பொருள். அவர்கள் பட்டியலிடும் இசுலாமிய வழிபாட்டு தளங்களின் பெயர், இடம் ஆகியவற்றில் சில பிழை இருப்பினும், அவர்கள் நோக்கம் இசுலாமிய வழிபாட்டு தளங்களை குறிவைத்து தாக்கி, இந்து - முஸ்லீம் பிரிவினையை உருவாக்கி கலவரத்தை தூண்டுவதாகும். இந்தப் பட்டியலில் நாடு முழுவதும் 1856 இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 175 தர்கா & மசூதிகள் அந்த பட்டியலில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் மலையின் சிக்கந்தர் தர்கா.
3.இதில் அச்சம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், இது முழுப்பட்டியல் இல்லையாம். இன்னும் இது போன்று பல இசுலாமிய வழிபாட்டு தளங்களை ஆராய வேண்டும் என்கிறது அந்த வலைதளம். அந்த வலைத்தளத்தில் Articles என்ற தலைப்பை சொடுக்கி, திறக்கிற பக்கத்தில் இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்தின் இசுலாமிய வழிபாட்டு தலங்கள் படம் வருகிறது. அந்தந்த மாநிலத்தின் படத்தின் மீது சொடுக்கினால், பட்டியல் விரியும்.
மாநிலம் வாரியாக வலைத்தளத்தில் குறிவைக்கப்பட்டுள்ள இசுலாமிய வழிபாட்டுத் தளங்கள்
reclaimtemples.com
1 Andhra Pradesh 142
2 Assam 2
3 Bihar 77
4 Delhi 72
5 Diu & Daman 1
6 Gujarat 170
7 Haryana 77
8 Himachal Pradesh 1
9 Karnataka 192
10 Kashmir 52
11 Kerala 2
12 Lakshadweep 2
13 Madya Pradesh 151
14 Maharastra 143
15 Odisha 12
16 Punjab 14
17 Rajasthan 170
18 Tamil Nadu 175
19 Uttar Pradesh 299
20 West Bengal 102
Total India 1856
4.ஆக, எப்படி பாபர் மசூதியுடன் நிற்காமல் மதுரா, காசி,ஞானவாபி என்று விரிகிறதோ, அதேபோல இதுவும் திருப்பரங்குன்றத்துடன் நிற்கப்போவதில்லை என்று தெரிகிறது. ஆக திருப்பரங்குன்றம் பிரச்சனை என்பது கார்த்திகை தீபம் ஏற்றுகிற நடவடிக்கை அல்ல. இது திட்டமிடப்பட்ட சதித்திட்டமாகும்.
5.இதில்,கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி - வி.எச்.பி, பா.ஜ.க , சங் பரிவாரங்கள் இப்படிப் பட்டியலை தயாரித்துள்ளன என்பதை 2002இலேயே சபரங்க் (sabrangindia.in) வலைதளம் அம்பலப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது.
2022-லும் எழுதியுள்ளது.
இந்த (reclaimtemples.com) வலைதளம் கேரள முகவரியைக் கொண்டுள்ளது.
இணையதளம்: reclaimtemples.com
கேரளா முகவரி:
1st floor, KPM towers,
Tirur, Kerala 676102
கைபேசி தொடர்பு எண்: +91 8848237352
மின்னஞ்சல்: contact@reclaimtemples.com
ஆனால், இதன் வலைதளப் பதிவர் யார் என்று தேடினால், mailing address கரீபியன் தீவில் உள்ள நாடான கீழ்கண்ட பஹாமாஸ் முகவரியைக் கொண்டிருக்கிறது.
இணையதள பதிவர் முகவரி:
OCEAN CENTRE, MONTAGU FORESHORE EAST BAY STREET, PO BOX SS-19084, NASSAU, BAHAMAS
6.பஹாமாலீக்ஸ் என்ற கறுப்புப்பண விவகாரத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் அமைந்திருக்கிற பகாமாஸ் முகவரி இதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட சர்வதேச அளவில் நிதி திரட்டி மிக விரிவான திட்டத்துடன் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
7.தமிழ்நாட்டில் அவர்கள் பட்டியலிட்டுள்ள சில முக்கியமான தர்கா மற்றும் பள்ளிவாசல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்
1 Malik ibn Dinar Mosque Kovalam Chengalpattu
2 Big Mosque Poonamallee Chennai
3 Walajah Big Mosque Triplicane Chennai
4 Kottai Hidayathul Islam Safia Jamath Ukkadam Coimbatore
5 Sulthan Alavudeen Dargah Goripalayam Madurai
6 Sikkanthar Dargah Tirupparakundram Madurai
7 Syed Sultan Oliyullah Darga Periyapattinam Ramanathapuram
8 Muhammad Qasim Appa Dargah Kilakkarai Ramanathapuram
9 Masjid Kulangarai Appa Palli Kilakkarai Ramanathapuram
10 Kattupalli Dargah Shareef Valinokkam Ramanathapuram
11 JUMMA MOSQUE Valinokkam Ramanathapuram
12 Ibrahim Bava Dargah Erwadi Ramanathapuram
13 Hazrath Syedina Syed Ismail Sadath Tharangambadi Mayiladuthurai
14 Nagore Dharga Nagore Nagapattinam
8.இசுலாமிய வழிபாட்டு தளம் மட்டுல்ல கிறித்துவ தேவாலயங்களையும் அவர்கள் குறிவைக்கிறார்கள். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், திருமலாபுரம் பசுபதேசுவரர் குடைவரைக் கோயில் அமைந்துள்ள மலைமீது திருமலை மாதா புனித லூர்து அன்னை கிறித்துவ தேவாலயம் உள்ளது. அது அகற்றப்பட வேண்டும் என இந்த வலைத்தளம் குறிப்பிடுகிறது.
ஆகவே, இந்திய நாட்டின் ஆன்மாவாக விளங்குகிற சமத்துவம், சகோதரத்துவம், மதசார்பின்மைக்கு எதிரான தாக்குதலை இந்த வலைத்தளம் செய்கிறது. மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்த இணையதளம் சட்டவிரோதமானதாகும். திருப்பரங்குன்றத்தில் போராட்டம் செய்யும் அமைப்புகள்,
கட்சிகளுக்குமான தொடர்பை காவல்துறை விசாரிக்க வேண்டும்.எனவே reclaimtemples.com வலைத்தளம் மீதும், இதன் உரிமையாளர், உறுப்பினர், நன்கொடையாளர், யாருக்கு நிதி உதவி செய்தார்கள், சர்வதேச தொடர்பு, சங்பரிவார் தொடர்பு , இவர்களுக்கும் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குமான தொடர்பு, ராம ரவிக்குமாரின் வங்கிக்கணக்குகள் குறித்து விசாரித்து அனைவரும் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
இப்படிக்கு
சே.வாஞ்சிநாதன்
மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக