வியாழன், 22 ஜூலை, 2010

முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை



திரைப்பட இயக்குநர் மகேந்திரன் "முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை இயக்கியவர். தரமான இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்கி தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தவர். பக்கம் பக்கமாக வசனம் பேசி திரைப்படத்தை நாடகம்போல் உருவாக்கிக் கொண்டிருந்த போக்கை மாற்றி, "திரைப்படம் விஷுவல் மீடியம்; இதில் உரையாடல்களைவிட காட்சி அமைப்புகள் மூலம்தான் கதை சொல்ல வேண்டும்' என்று நிரூபித்துக் காட்டியவர்.

இவர் இயக்குநராகப் பரிணாமம் பெறுவதற்குமுன் "தங்கப் பதக்கம்' உட்பட பல படங்களுக்கு பக்கம் பக்கமாக வசனம் எழுதியவர். அதுபற்றி இந்த நேர்காணலில் அழகாக- லாஜிக்காக விளக்கம் தந்திருக்கிறார்.1948-ல் வெளிவந்த "சந்திர லேகா'வை இன்று ஒரு வெளி நாட்டுக்காரருக்குப் போட்டுக் காட்டுங்கள். அவர் வியந்து மாய்ந்துவிடுவார். எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டம், இயக்கம், எத்தனை அருமையான திரைக்கதை, எப்பேர்ப்பட்ட அடக்கி வாசிக் கப்படும் அபூர்வ நடிப்பு, எத்தனை உன்னதமான கலை, உடை, இசை போன்ற அம்சங்கள் என எண்ணி மாய்ந்து போவார். இந்தப் படம் 1948-ல் வெளியானது என்று சொன்னால் நம்ப மாட்டார். அப்புறம் அவரை நம்ப வைத்தா லும், 1948-லேயே இப்படிப் படம் எடுத்தவர்கள் இந்த 2010-ல் எப்பேர்ப்பட்ட அற்புதமான படங்களை எடுத்திருப்பார்கள் என்று தவிப்பார். பிறகு இன்று வரும் பெரும்பாலான படங்க ளைப் பார்த்துவிட்டு அவர் எவ்வளவு குழப்பமடைவார் என்று எண்ணிப் பாருங்கள். இன்னும் நாம் டூயட் பாடிக்கொண்டி ருக்கிறோம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நாம் எடுப்பது சினிமாவே அல்ல.''

படவிழா ஒன்றில், நீங்கள் இயக்கிய "உதிரிப்பூக்கள்' படத்தை சப்-டைட்டில் இல்லாமலே பார்த்த வெளிநாட்டவர் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியபோது எப்படி உணர்ந்தீர்கள்?

""2010- மார்ச் மாதம் Indo- Korean Centre- Samsung இணைந்து International women's film festival நடத்தினார்கள் சென்னையில். 55 நாடுகளைச் சேர்ந்த 110-க்கு மேற்பட்ட புகழ் பெற்ற திரைப் படங்கள் திரையிடப்பட்டன. அதில் ஒன்று "உதிரிப்பூக்கள்'. இங்கிலீஷ் sub-title கொடுத்திருந்தேன். இத்தனை நாட்டுப் படங் களைப் பார்த்த வெளிநாட்டு, உள்நாட்டு ரசிகர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்த நமது "உதிரிப்பூக்கள்' படத்தை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகி றார்கள் என்ற தீர்மானமான சங்கடத்தோடு நான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன்.

படம் முடிந்தது. சில வினாடிகள் மௌனம். அப்புறம் திடீரென எல்லாருமே எழுந்து நின்று கைதட்டினார்கள். என்னைச் சூழ்ந்துகொண்டு என்னுடன் படத்தின் சிறப்பை சிலாகித் தார்கள். நான் அதிச யப்பட்டேன். நீங்கள் கேட்டதுபோல தமிழும் தெரியாத- ள்ன்க்ஷலிற்ண்ற்ப்ங்லிம் படிக் காமல் "அர்த்தம் புரிந்து பல இடங்க ளில் நான் அழுதேன்' என ஒரு வெளி நாட்டவர் சொன்னது என்னை சிலிர்க்க வைத்தது. " "உதிரிப்பூக்கள்' போல இப்போது ஏன் தமிழில் படங்கள் வருவதில்லை?' என்றெல் லாம் அவர்கள் என்னைக் கேட்டது எனக்குப் புத்துணர்ச்சி தந்த அனுபவம்.''

கருத்துகள் இல்லை: