வெள்ளி, 23 ஜூலை, 2010

பொலிஸ் தாக்குதலில் மாணவன் மரணம். றுகுணு பல்கலைக்கழகத்தின்

கடந்த ஜூன் மாதம் 18 ம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவன் மீதான பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்து றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாத்தறை பொலிஸ் வரையிலான ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஆனால் மாணவர்களின் பேரணியை பொலிஸார் மாத்தறை பிரதான பஸ் தரப்பிடம் அருகே முடக்கியுள்ளதுடன் அங்கு ஆயிரக்கணக்கான பொலிஸாரையும் இராணுவத்தினரையும் குவித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஊயிரிழந்த மாணவன் அருண பண்டார உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய தாயார் வயலட் மனதுங்க, தனது மகன் மீது பொலிஸார் தாக்கியது உண்iயாயினும் சக மாணவன் ஒருவன் தாக்கியதே பலத்த வலியை தந்ததாக தனது மகன் தெரிவித்தார் என அததெரணவிற்கு தெரிவித்துள்ளார். தான் நான்கு தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று மிகுந்த சிரமப்பட்டு மகனை பல்கலைக்கழகம் அனுப்பியதாவும் , இவ்வாறானதோர் கொடுமை மேலுமோர் தாய்க்கு இந்நாட்டில் இடம்பெறக்கூடாது என அலறுகின்றார்.

கருத்துகள் இல்லை: