திங்கள், 19 ஜூலை, 2010

விஜயகலா மகேஸ்வரனுக்கு யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான முன்முயற்சி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் எடுக்கப்பட்டதாகவும் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக யாழ் செல்லும் அரசாங்க அமைச்சர்கள் விஜயகலா மகேஸ்வரனைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டுள்ளதாகவும் தமது உத்தியோகபூர்வ விஜயங்களில் விஜயகலா மகேஸ்வரனையும் இணைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முயன்று வரும் பசில் ராஜபக்ச யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது விஜயகலா மகேஸ்வரன் பேசுவதற்கு பசில் ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் தமது நேரங்களிலிருந்து 10 நிமிடங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் நடைபெற்ற மஹிந்த -  ரணில் சந்திப்பின்போது கட்சித்தாவல்களுக்கு எதிராக இணக்கமான ஒரு தீர்மானம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: