திங்கள், 19 ஜூலை, 2010

சுற்றுலா சென்ற தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில்

கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் வினோய் விஸ்வம் தெரிவித்தார்.

செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவிலும், தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய வனத்துறையினர் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கொல்லத்தில் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் கூறுகையில்,

அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி பகுதியில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கேரளாவிற்கு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் வனத்துறையை சேர்ந்தவர்களும், பலாத்காரத்தில் தொடர்புடையவர்களுமான மணிகண்டன், உன்னிகிருஷ்ணன், ஷாகுல் கமீது ஆகிய 3 பேரும் இக்குழுவில் இருந்து முதல் கட்டமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்தவர்: தமிழச்சி
பதிவு செய்தது: 19 Jul 2010 12:18 am
அந்த நாய்களை புடிச்சு கொதிக்கிற தண்ணியில் முக்கி எடுங்க. அப்படியே தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் பட்டி தொட்டியெல்லாம் திரியும் இந்த மாதிரி ஆண்களை புடிச்சு அடிச்சு கொல்லுங்க. அரேபியா அளவிற்கு தண்டனை கொடுத்தால்தான் இந்த நாடு உருப்படும்.

கருத்துகள் இல்லை: