சனி, 24 ஜூலை, 2010

மகளிர் இன்ஸ்பெக்டர் மீது லஞ்சப் புகார் : வீடியோவில் பதிவு செய்தவர் கைது

திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; "வீடியோ' சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத் துள்ள அய்யம்பாளையத் தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற் றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக் கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை "வீடியோ' சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று "வீடியோ' சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

பரபரப்பு: "வீடியோ' சுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷனில் வைத்து சுப்ரமணியத்தை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், அவர் காலை உடைத்து விட்டதாகவும் தகவல் பரவியதால், ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருப்பூர் துணை மேயர் செந்தில் குமார், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் மற்றும் இதர கட்சிகள் சார்ந்த சிலர் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.00 மணி வரை பரபரப்பு நீடித்த நிலையில், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் "வீடியோ' சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.

லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட"வீடியோ' சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.

லஞ்சம் வாங்கவில்லை; டி.எஸ்.பி., உறுதி: டி.எஸ்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது; பிரபாவதி வழக்கு விசாரணை தொடர்பாக, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணன், இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு பரிச்சயமாகி உள்ளார். அவர்களது கடையில் மொபைல் போன் சர்வீசும் இருந்ததால், தனது பழுதடைந்த மொபைல் போனை சரி செய்யவே, அவர் அக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுப்ரமணியம், படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி மிரட்டியுள்ளார். பிரபாவதி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சரவணனிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ போலீசாருக்கு வாய்ப்பு இல்லை. மருத்துவ விடுப்பில் மூன்று நாட்களாக உள்ள இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரிச்சயமானவர் என்ற முறையில் சரவணனின் கடைக்குச் சென்றபோது, வீடியோவில் படம் பிடித்து மிரட்டப்பட்டுள்ளார், என்றார்.

சுப்ரமணியம் "சமூக சேவை'யாளரா? கைது செய்யப்பட்ட "வீடியோ' சுப்ரமணியம், அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் பல்வேறு குற்றவாளிகளை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு வெளிச்சப்படுத்தியவர். தன்னை சமூக சேவையாளராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர். அதேநேரத்தில், இவரது வீடியோ வெளிச்சத்தில் விழுந்த சிலரை, ஊழல் ஆதாரத்தை வெளியிடாமல் மறைக்க, பல லட்சங்கள் கேட்டு அவர் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. லஞ்சம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்து சில மாதங்கள் கழிந்த நிலையில், இவர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதால், குறிப்பிட்ட காலம் வரை இவர் தன்னிடம் சிக்கிய ஊழல் பேர்வழியிடம் பேரம் பேசியதாகவும், பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வாசகர் கருத்து (24)
singam - namakkal,இந்தியா
2010-07-24 07:41:56 IST
இந்த மாதிரி நடபதால் தான் எவனும் சாட்சி சொல்ல வருவதில்லை ,.....போலீஸ் உங்கள் நண்பன் என்பதன் அர்த்தம் இதுதானோ ?...
ஸ்ரீராம் - chennai,இந்தியா
2010-07-24 07:41:14 IST
நல்லதுக்கு காலம் இல்லை...
பாமரன் - chennai,இந்தியா
2010-07-24 07:37:34 IST
"மருத்துவ விடுப்பில் மூன்று நாட்களாக இன்ஸ்பெக்டர் இந்திராணி உள்ளார்" எனில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் எவ்வாறு சுப்ரமணியத்தை arrest செய்ய முடியும்..?...
2010-07-24 07:34:42 IST
இக்கால ராபின் ஹூட்?...
தாஸ் - chennai,இந்தியா
2010-07-24 07:15:36 IST
** பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன ** அப்போ ஊழல் செய்தவங்களை மட்டும்தான் படம் பிடிச்சிருக்கார்னு ஒத்துக்கரிங்க! முதலில், அவங்களை தண்டியுங்க. அப்புறமா மீதி இருக்கறவங்க வேற கேசுல மாட்டுவாங்க. நேர்மை இல்லாதவர் சொன்னா உண்மை இல்லைன்னு ஆயிடுமா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!...
கே.ரமணி - chennai,இந்தியா
2010-07-24 07:03:44 IST
இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதுதான். மக்களுக்குத் தெரியாதா நம்மூர் போலிசின் லட்சணம். வெட்கம்....
சூர்யா - Mangalore,இந்தியா
2010-07-24 06:40:13 IST
எந்த நல்லவனையும் விட்டுவைக்க மாட்டோம் ! நாங்க லஞ்சம் வாங்குறத படம்பிடிச்சு பிரச்னை பண்ணுற சுப்ரமணியத்தை உள்ள தள்ளி பாடம் கற்பிப்போம் ! இது வருவாய்த்துறை மற்றும் போலீஸ் கூட்டுத்திட்டம் !...
ramalingam - chennai,இந்தியா
2010-07-24 06:16:03 IST
இது போன்று வீடியோ எடுத்து மிரட்டுவது வர வர அதிகமாகி போச்சு. முதலில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இருக்கு. நீதி கொடுக்க கோர்ட் இருக்கு. சாதாரண மக்கள் இது போல் வீடியோ எடுப்பதை முதலில் தடை செய்ய வேண்டும்.இவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்கிறார்களா அல்லது மிரட்டி பணம் பன்னுகிரர்களா என தெரிவதில்லை. கயவர்களை அடையலாம் காட்ட வீடியோ எடுத்தேன் என சம்மந்தப்பட்டவர் கூறினாலும் யார் நம்புவது. பெட்ரூமில் வீடியோ எடுத்து இரண்டு மாதம் கழித்து தொல்லைகட்சிகளில் போடுவது. எதை எல்லாம் கண்டிப்பாக அனுமதிப்பது கூடாது. காவல்துறை இது போன்று நடப்பவர்களை முதலில் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும....
bakruthin - muara,புருனே
2010-07-24 06:12:32 IST
ஆஹா இல்லேனாலும் உங்க போலீஸ் துறைக்கு லஞ்சம் என்றால என்னன்னு தெரியாது பாரு ? சரி சரி இருக்குற கேச எல்லாம் அவரு மேல போடுங்க...
True Indian Abu dhabi - abudhabi,இந்தியா
2010-07-24 05:57:59 IST
இந்திராணி விஷயத்தில் எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. வீடியோ சுப்ரமண்யம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் இதனால் லஞ்சப்புகாரில் பிடிபட்டால் சுப்ரமணியனின் நிலை பரிதாபமாகிவிடும். உண்மை எப்போதும் உண்மைதான்.Jai Hind...
kim - seoul,இந்தியா
2010-07-24 05:41:43 IST
எது உண்மை ? !! போலிஸ் உண்மை பேசுவது மிக மிக அரிது !!...
ஜெயகுமார் - newcastle,இந்தியா
2010-07-24 05:00:58 IST
லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஏன் அவரை கைது செய்யவேண்டும்? அவர் பதிவு செய்த வீடியோ வை கொடுத்தால் போலீஸ் என்ன செய்யும் ? அவர் அவர் வழியில் சமூக சேவை செய்திருக்கலாம். அது போலீசுக்கு பொறுக்க வில்லை ......
ராஜ் - chennai,இந்தியா
2010-07-24 04:56:23 IST
This is a classic case of police abuse for you. Charge people who fight against corruption with false cases and intimidate until they give up. These abuses will go on until we the common citizenry wisen up....
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
2010-07-24 04:06:55 IST
யாரைத்தான் நம்புவதோ? தனக்கு சாதகமாக வழக்கு என்று ஒவ்வொருவரும் கூறினால் என்னதான் உண்மை ? எப்படி கண்டுபிடிப்பது /?மனசாட்சிப்படி நடங்கள் .....
முஹம்மது பிலால் - Kualalumpu,மாலத்தீவு
2010-07-24 03:51:03 IST
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...
SHERIFF - CHENNAI,இந்தியா
2010-07-24 03:46:31 IST
SUBRAMANIKU IDU THEVAI ILLAADA VELA...
டைகர் - Trichy,இந்தியா
2010-07-24 03:08:51 IST
வீடியோ எடுத்த நபர் ஒன்னும் தேச விரோத செயலை செய்யவில்லை!! அதற்கு ஏன் போலீசார் அவரை மறைவு இடத்தில வைத்து விசாரிக்க வேண்டும்? ஏதோ உள்ளது.. அதோடு போலீசார் குற்றம் புரியவில்லை என்றால் எதற்கு பயப்படவேண்டும்? வீடியோ எடுக்கற நபர் உண்மையிலயே நாட்டு நல்லதுக்காக பண்ணியிருந்தால் நல்லது.. அவரும் பணம் சம்பாதிக்க வேணும்னு செஞ்சிருந்தா உள்ளே தள்ளியதில் தப்பு இல்ல !!...
அருளரசு - Chennai,இந்தியா
2010-07-24 02:38:02 IST
போலீஸ் செய்தது தவறு. லஞ்சம் வாங்கிய inspecter டிஸ்மிஸ் செய்யப்படணும்....
போலீஸ் - tamilnad,இந்தியா
2010-07-24 02:22:40 IST
நாங்க இந்த வேலைய தேர்ந்து எடுப்பதே அரசியவதிகளை ஓரம் கட்டி அதிகம் சம்பாதிக்கதான்,ஏனையா உங்களுக்கு காண்டு.வாழ்க வளமுடன்...
ஸ்ரீராம் - Atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 01:45:59 IST
இதில் யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறேன் என்று சொல்லும் சமூக சேவை சுப்ரமணியம். அவரின் மறுபக்கமோ Black Mail செய்யும் மோசடி பேர்வழி என்று குற்றச்சாட்டு. இதில் எதை நம்புவது என்று புரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் ரஜினி படத்தில் வருவது போல் 5 நிமிஷ பாட்டுக்குள் பணக்காரனாகி விட ஆசை. இது அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கை மேல் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. பள்ளியில் Moral science பாடத்தை கட்டாயமாக்கி புதிய தலை முறையை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்....
தமிழன் - USA,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 01:28:46 IST
நல்ல அடிச்சு, கஞ்சா, அபின் பாக் தீவிரவாதி உடன் தொடர்பு, பிரபாகரன் கூட்டாளி நு சொலி 100 கேஸ் பூட்டு உள்ள தள்ளி பெண்டு எடுங்கடா. போலீஸ் பவர் என்னன்னு காமிங்கடா. இப்படி கேஸ் வீடியோ எடுக்க ஆரம்பிச்சா எல்லா போலீசையும் ஜெயில் ல தான் பாக்க முடியும். எங்க பொலப்பே லஞ்சத்தில தான் ஓடுது. அத வீடியோ எடுத்தா நாங்க சும்மா இரு‌ப்போமா? நாங்க வாழப்பழம் லஞ்சமா வாங்கிறது, சிகரெட் லஞ்சமா வாங்கிறது, Rs10 லஞ்சமா வாங்கிறது, பிச்சகாரன் தட்ல எடுக்குறது இத எல்லாம் நீங்க வீடியோ எடுப்பீங்க. நாங்க சும்மா இருப்போமா?...
மனம் நொந்தவன் - kovai,இந்தியா
2010-07-24 01:21:04 IST
தனி ஒரு மனிதனுக்கு இன்று இந்தியாவில் பாதுகாப்பும் உரிமையும் இல்லை. 332ஆவது பிரிவின் படி போலீஸ் லஞ்சம் வாங்குவதும் அவர்களுடைய அன்றாட வேலை போலும். நாட்டின் சரிவு வேகம் கூடிகொண்டே போகிறது...
கூலி - saakkadai,இந்தியா
2010-07-24 01:08:01 IST
நெருப்பு இருந்தாத்தான் புகையும்.. அதிகாரிகள் ஒன்றும் ஏஞ்சல் இல்லை.. அதையும் மீறி வீடியோ சுப்ரமண்யம் பழச மெயில் பண்ணினார் என்றால் திருடன் தேளை கொட்டிக்கொண்டதற்கு சமம் ...இதில் திருடனும் ஒஸ்தி இல்லை தேளும் ஒஸ்தி இல்லை ...பாவம் பொது ஜனம்! ..காசு கொடுத்து ஓட்டுப் போட்டதற்கு இதுவும் வேணும், இன்னமும் வரும்.....

கருத்துகள் இல்லை: