வியாழன், 22 ஜூலை, 2010

முரளி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். காலியில் நடைபெறும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் .போட்டியின் இறுதிநாளான இன்றே முத்தையா முரளீதரன் இந்த சாதனையை நிலைநாட்டினார். இந்திய அணியின் சார்பில் களத்திலிருந்த ஓஜா 13 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை முரளிதரனின் பந்துவீச்சில் ஜேயவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 28ம் திகதி தனது முதலாவது ரெஸ்ட் போட்டியில் முத்தையா முரளீதரன் விளையாடினார். தனது முதல் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களை கைப்பற்றுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் காலி விளையாட்டு மைதானத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அவருக்கு விசேட விருது ஒன்றை வழங்கி கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: