வியாழன், 22 ஜூலை, 2010

சிம்பு. லிங்குச்சாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன்.

லிங்குச்சாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் இப்போது வேறு ஒரு நடிகரைப் போட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். இது என்ன நியாயம் என்று குமுறியுள்ளார் நடிகர் [^] சிம்பு.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு லிங்குச்சாமியின் படத்தில் சிம்பு நடிப்பார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் படத்திலிருந்து சிம்புவை நீக்கி விட்டதாக செய்திகள் [^] கூறுகின்றன. இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிம்பு அளித்துள்ள அறிக்கை..

பூபதி பாண்டியன் இயக்கத்தில், லிங்குச்சாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். ஆனால் பின்னர் நிலைமை மாறியது.

படத்தை தயாநிதி அழகிரி [^]யின் கிளவுட் நைன் நிறுவனம் [^] தயாரிக்கும், லிங்குச்சாமி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

டெக்னிக்கலாக பார்த்தால், நான் கிளவுட் நைன் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவும் இல்லை. தயாநிதி அழகிரி எனது நண்பர்தான். எங்களுக்கிடையே நல்ல உறவும் உள்ளது.

லிங்குச்சாமி தனது படத்தின் கதையை எனக்குச் சொல்வார் என்று நான் கிட்டத்தட்ட 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் கதையையும் சொல்லவில்லை. எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் சொல்லவில்லை.

கதை வரும், ஸ்கிரிப்ட் வரும் என 100 நாள் காத்திருந்தது வீணாகிப் போனது. இதையடுத்தே நான் வானம் படத்தை செய்ய முடிவெடுத்தேன். இதை துரை (தயாநிதி அழகிரி) உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க தென் ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பு அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், செப்டம்பர் 1ம் தேதி முதல் ஷூட்டிங்கை ஸ்டார்ட் செய்யலாம் என உறுதியாக தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் லிங்குச்சாமி என்னைப் படத்திலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வந்து அதிர்ச்சி அடைந்தேன். 100 நாட்களாக நான் கதை கேட்க காத்திருந்த நிலையில், எனது நாட்களை வீணடித்த நிலையில் எப்படி இப்படி லிங்குச்சாமி அறிவித்தார் என்பது புரியவில்லை? எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் அவர் சொல்லவில்லை. கதை என்னவென்பதையும் சொல்லவில்லை.

போடா போடி படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் நான் ப்ரீயாகி விடுவேன் என்பதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நீக்கி விட்டு இன்னொரு நடிகரைப் போட்டுள்ளதாக கூறியுள்ளார். இது முற்றிலும் தொழிலுக்கு விரோதமானது, இப்படி அவர் செய்திருக்கக் கூடாது என்று குமுறியுள்ளார் சிம்பு.
பதிவு செய்தவர்: கோவாலு
பதிவு செய்தது: 22 Jul 2010 5:17 am
இரவிலையும் பகலிலையும் , டூயட்டிலையும்... அம்மா செத்து போனா ..அப்புச்சி புட்டுகிச்சின்னா ...... பாட்டி செத்துட்டுதுன்னாலும்........................... கூலிங்கிளாஸ் போட்டு இமேஜை காப்பாத்துற... நம்ம தமிழக ஹீரோஸ் வாழ்க !எல்லாம் விதிடா விதி !

கருத்துகள் இல்லை: