வெள்ளி, 23 ஜூலை, 2010

கொடைக்கானல் :மாணவிகளின் பாலியல் தொந்தரவுஉட்பட பல்வேறு தொல்லை

கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவிகளின் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தரமான கல்வி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட், பூடான் நாட்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.தற்போது வெளி மாநில மாணவர்கள் கொடைக்கானலில் தங்கி படிக்க பயந்து "டிசி' வாங்கும் நிலை நடந்து வருகிறது. இதனை தவிர்க்க பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பள்ளி தாளாளர்கள் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி சி.இ.ஓ., மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு புது உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பள்ளியின் நோக்கத்தை தவிர்த்து செயல்படுதல்,பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு பிரச்சனையில் மாணவர்கள் பாதிக்கப்படும் செயல்களில் நிர்வாகங்கள் ஈடுபடக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து பள்ளி தாளாளர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: