வியாழன், 22 ஜூலை, 2010

சாவகச்சேரி கள் விற்பனை நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல

 தென்மராட்சி சாவகச்சேரியில் கள் விற்பனை நிலையம் ஒன்றில் கள் அருந்தி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த கள் விற்பனை நிலைய உரிமையாளரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றப் பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபருக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி ச.சிவரூபன் மூலம் நீதிமன்றில் மனு கையளிக்கப்பட்டபோதும் அந்த மனுவை நீதிவான் நிராகரித்துள்ளார். இதேவேளை இந்தக் கள் விற்பனை நிலையம் சீல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamil.dailymirror.lk

கருத்துகள் இல்லை: