வெள்ளி, 23 ஜூலை, 2010

இலங்கைப் பணிப்பெண்கள் இருவர் மத்திய கிழக்கில் மரணம்

இதில் ஒருவர் தற்கொலை செய்தும் மற்றையவர் வீதி விபத்து மூலம் இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்    தற்கொலை செய்து கொண்ட பெண் ஹபராதுவ பகுதியை சேர்ந்தவராவர். இவர் தனது தாயின் மரண இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமையாலே தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கூறினார்.
இதேவேளை, மற்றைய பெண் மாத்தறை பகுதியை சேர்ந்தவராவர். இவர் லெபனானின் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் மோதி இறந்துள்ளார்.
இவர் மீது வாகனத்தை மோதிய இரண்டு இளைஞர்களையும் லெபனான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: