சனி, 24 ஜூலை, 2010

வெள்ளைக் கொடிகளுடன் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப்

வெள்ளைக்கொடி வழக்கு குற்றப்பத்திரிகை 29ம் திகதி தாக்கல் செய்யப்படுகின்றது,

வெள்ளைக் கொடிகளுடன் யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பேட்டியளித்திருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி அழைக்கப்பட உள்ளது.

அன்றைய தினம் இவர் மன்றுக்கு ஆஜராக வேண்டும் என்று இந்நீதிமன்றம் அறிவித்தல் வழங்கி இருக்கின்றது. சட்டமா அதிபரால் இந்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப் பத்திரம் பொன்சேகாவுக்கு அன்றைய தினம் வாசித்துக் காட்டப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொள்கின்றாரா?இல்லையா? என்று வினவப்படும்.

ட்ரயல் அட் பார் முறையில் இடம்பெற இருக்கும் இவ்வழக்கை மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையில் சக நீதிபதிகளான வி.வரவெவ,எஸ்.சற்.ரஸீம் ஆகியோர் விசாரிப்பார்கள்.
...............................

கருத்துகள் இல்லை: