புதன், 21 ஜூலை, 2010

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மற்ற மசோதாக்களை விட, எம்.பி.,க்களின் சம்பள மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டையும் சேர்த்து, 795 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களின் மாதச்சம்பளம் தற்போது 16 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடைசியாக, பத்தாண்டுகளுக்கு முன், எம்.பி.,க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின், சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2006 ஜனவரியில் இருந்து அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, மத்திய அரசின் அமைச்சரவை செயலர்களுக்கான சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அமைச்சரவை செயலர்களை விட, எம்.பி.,க்களுக்கு கூடுதல் அந்தஸ்து உண்டு. காரணம் சட்டம் இயற்றும் பொறுப்பை உடையவர்கள் என்று  கருதப்படுகிறது. இதனால், அமைச்சரவை செயலர்களை விட, தங்களின் சம்பளம்  ஒரு ரூபாயாவது அதிகமாக இருக்க வேண்டும் என, எம்.பி.க்களின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, எம்.பி.,க்களின் சம்பளம் தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக (ஐந்து மடங்கு) அதிகரிக்கப்பட வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த சம்பள உயர்வு, தற்போது அமைச்சரவை செயலர்கள் பெறும் சம்பளத்தை விட, ஒரு ரூபாய் கூடுதலாகும்.சம்பள உயர்வுடன், பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தினப்படியையும் தற்போதுள்ள 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும், அதேபோல், எம்.பி.,க்களின் தொகுதி செலவு நிதி, அலுவலகச் செலவு நிதி ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், வரும் 26ம் தேதி பார்லி மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரிலேயே எம்.பி.,க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 110 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரில், அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா, நீதித் துறை பணிகள் தொடர்பான மசோதா, மத வன்முறை மசோதா, கடத்தல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெண்கள் ஒதுக்கீட்டு மசோதா இந்த கூட்டத் தொடரில் கண்டு கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவை, லோக்சபாவில் நிறைவேற்றுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பி.கே.பன்சால், நேற்று அமைச்சக செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

எதிர்க்கட்சிகள் நெருக்கடி:ஐக்கிய ஜனதா தள தலைவரும், தே.ஜ., கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியதாவது:பார்லிமென்டில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, விலைவாசி உயர்வு பிரச்னைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த "பந்த்'திற்கு மக்களிடையே ஆதரவு இருந்ததை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. இது தொடர்பாக, தே.ஜ., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
ramalingam - chennai,இந்தியா
2010-07-21 05:52:26 IST
மிக மிக அவசியம். அதிகமா உழைக்கிரர்கள் இல்லையா. அதனால் அவசியம் 5 மடங்கு என்ன 10௦ மடங்கு ஊதியம் கொடுக்கணுங்க....
ச.Ramasamy - Tirunelveli,இந்தியா
2010-07-21 05:37:50 IST
எம் பி சம்பளம் உயர்வுக்கு அமைச்சர் அவை செயலர்களை ஒப்பிடுவது ஞாயமானது அல்ல. அமைச்சர் அவை செயலர்களின் கல்வி தகுதி அனுபவம் மற்றும் திறமைகள் பொறுப்புகளை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அவர்களின் தற்போதைய சம்பளமே அதிகம் எல்லாமே அவர்களுக்கு இலவசம் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுகின்றனர். எத்தனை பேர் மன்றத்துக்கு ஒழுங்காக போகிறார்கள். முக்கியமான மசோதா தாக்கல் செய்யும் போதுகூட பலபேர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதை நாம் டிவி மற்றும் செய்திதாள்களில் படிக்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் வரி பணத்தில் இவ்வளவு பணத்தை கொட்டி தீர்கவேன்டுமா? இப்பொழுதும் எத்தனையோ கிராமங்களில் சரியான உணவோ உடுக்க துணியோ குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யுள்ளனர் என்பதை இந்த அரசியல்வாதிகள் அறிவார்களா? நாட்டில் எதற்கெடுத்தாலும் லஞ்சம். இவர்களிடமிருந்து நாட்டை காக்க இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வர வாய்ப்புள்ளது என்பதை நம் மறக்கவேண்டாம். மீண்டும் ஒருமுறை எமர்சென்சி வந்தால் நாடு உருப்படும் என்பது என்போன்றோர்களின் கருத்து. நடக்குமா?...
2010-07-21 05:35:05 IST
ஏற்கனவே ஊரை கொள்ளையடித்து சொத்து சேர்ப்பது எல்லாம் பத்தாதா ? பாவிங்களா உங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டுமா. இப்படி ஏழைகள் வயிறு எரிய உங்கள் வீட்டில் அடுப்பு எரிய எப்படியடா உங்களுக்கு மனசு வருகிறது. உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுங்கடா. எவ்வளவோ ஏழைகள் ஒரு வேளை சோறுக்கு கஷ்டப்படும்போது தேவை ஊரான் காசு...
ராஜா - pune,இந்தியா
2010-07-21 05:01:47 IST
இனி ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில் சிக்கல் இருக்காது....
NARAYANAN - chennai,இந்தியா
2010-07-21 05:01:03 IST
MPS ARE VERY POOR. tHEY CANNOT LIVE WITHOUT PAY HIKE. BUT COMMON INDIANS ARE VERY RICH. SO THEY CAN BEAR THE PRICE RISE OF LPG, PETROL, AND OTHER PRODUCTS. WHAT A INDIAN FINIANCIAL LOGIC AND THEORY. THE INDIANJ FINIANCIAL ADVISERVISORS VERY EXPERT AND THEY ARE ALSO CLAPPING FOR THIS. BECAUSE THEY WILL ALSO GET BENEFIT OUT OF THESE. SHAME TO THE GOVERNMENT. THE CITIZENS OF INDIA ARE NOT LESS THAN A DONKEY....
True Indian abudhabi - abudhabi,இந்தியா
2010-07-21 04:51:58 IST
சம்பளத்தை கூட்டுவதற்குமுன் MP களின் சொத்துக்கள், அவை எவ்வாறு வந்தது என்றுகூட ஆராய்ச்சி செய்தால் மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்படலாம்.JAI HIND...
Arjun - chenaai,இந்தியா
2010-07-21 04:12:51 IST
...சரண் தாஸ் மகந்த் தலைமையில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது... 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக (ஐந்து மடங்கு) அதிகரிக்கப்பட வேண்டும் என, பரிந்துரை ... .......ஒத்தனும் இதை எதிர்க்க மாட்டீர்களே.பணம் அல்லவா.பிணம் தின்னி கழுகுகள்.. பெட்ரோல் விலை,வேலைஇன்மை,வறுமை,ஏழைகள் ஒருவேளை சோத்துக்கு திண்டாட்டம்,சுகாதார சீர்கேடு,லஞ்சம், இவைகளுக்கு மத்தியில் இவங்களுக்கு 5 மடங்கு சம்பள உயர்வு தேவை தானா.ஏற்கனவே எல்லாம் ஓசியில் கிடைகிறது.இனி கேட்பானேன்.பாருங்கள் ஒரு அதிகாரி(உயர்) சம்சாரம் குழந்தை குட்டிகளுடன் மலேசியா சிங்கப்பூர் இப்படி (யாரோ வாங்கி தரும் டிக்கெட்களை)ஊர் சுற்றுகிறாள்.இப்போது சுங்க துறையில் வைரகற்களை 2 முறையாக காணோம் ..சுங்க துறை உயர் அதிகாரி 'சுமதி' (பாஸ்போர்ட் புகழ்) போல ஏதாவது கோல்மால் பண்ணியிருப்பார் என்கிற சந்தேகம் எழுவதாக பரவலான கருத்து உள்ளது .விசாரித்தால் வெளிவரும்.ஏனெனில் இந்த post மிக powerful post .சாதாரண ஊழியனே எனக்கு தெரிந்து சீமை சரக்கிலிலருந்து வாசனை திரவியம் (perfume ) வரை மிக சாதாரணமாக கொண்டுவந்து விற்பது ஊரறிந்த விஷயம்.வெளிவரும் ஒருநாள் பாப்போம்..உண்மையான விசாரணை அதிகாரியை பொருத்தது..மனிதனின் ஞாபகம் மிக குறைவு .இன்று நடப்பதை நாளை மறந்து விடும் சுபாவம்.. கொள்ளையில் நாடு சீரழிந்து கண்டிருக்கிறது.தினமலர் தலையங்கம் வெளியிட்டு மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்பது என் ஆவல்.நடக்குமா.ஆசிரியர் மனது வைக்கவேண்டும் இவ்வளவு பாப்புலரான' இதழில் வெளிவந்தால் கொஞ்சம் விழிப்புணர்வு வரலாம் ..அர்ஜுன் Chennai...
ந.easwaran - subangjaya,மாலத்தீவு
2010-07-21 04:04:38 IST
இவர்களை ஆட்சியில் அமர வைத்ததர்க்கு,சம்பள உயர்வு ஒரு கேடு.அதுவும்,ஐந்து மடங்கு.இது கொடுமையிலும் பெரும் கொடுமை.என்றென்றும் இந்திய மக்கள் ஏழைகள்தான்....
ராஜேஷ் - Virudhunagar,இந்தியா
2010-07-21 04:04:19 IST
ஏன் 1 கோடி கொடுக்கலாமே...இந்தியா இன்னும் 2020 ல இருக்கவே இருக்காது...கடன் பட்டு நாட விட்டே ஓட வேண்டியது தான் ... எழுதி வசுகோ tax will be 80%.....
arun - Glasgow,இந்தியா
2010-07-21 04:02:53 IST
இந்த சம்பளம் மட்டும் வாங்குபவர்கள் என்றால் மாதம் ஒரு லட்சம் வாங்கட்டும், ஒன்றும் தவறு இல்லை. ஆனால் கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம்? இதை ஒரு வருடத்திற்கு கனகிட்டல் 76 கோடி. இதை அவர்கள் தங்களுடைய தொகுதிக்கு செலவு செயலாம். நம்முடிய அரசியல்வாதிகள் மாறினால் தான் நாடு முன்னேற முடியும்....
ப.சந்திரசேகரன் - california,உஸ்பெகிஸ்தான்
2010-07-21 03:36:57 IST
எம்பி களின் சம்பளம் மட்டும் அல்ல ,அவர்களுக்கு பங்களா ,கார்,பென்ஷன்,அவர்களின் வாரிசுகளுக்கு IAS ,IPS பதவிகள் ,போன்ற எல்லா சலுகைகளும் செய்து தர வண்டும்.இவர்கள் கிழி,கிழி என கிழிப்பது நமக்கு நன்றாக தெரியுமே...
மு ஷா - jeddah,செனகல்
2010-07-21 03:35:02 IST
இந்திய மக்களே கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். அவர் அவர் பாக்கெட் நிரம்பினால் போதும் என்று 5 மடங்கு சம்பளத்தை உயர்த்த போகிறார்கள். M P மந்திரிகளுக்கு சம்பளம் இல்லாமல் சேவை செய்ய முடியாதா? அந்த சேவை மனப்பான்மை உள்ளவர்களை மட்டுமே இனி நாம் தேர்ந்து எடுப்போம் என்று ஒரு முடிவு எடுத்தால் தான் நம் நாடு உருப்படும். ஜெய் ஹிந்த் ....
முத்து - tamilnadu,இந்தியா
2010-07-21 02:53:41 IST
ஆமா ரொம்ப நாட்டுக்காக உழைக்கிறாங்க..... இது ஒன்னுதான் பாக்கி......
கோபால் - Vancouver,கனடா
2010-07-21 02:22:42 IST
They don't deserve this hike. They are wasting money by sitting inside the parliament and doing dirt work outside the parliament. We are just taking this country to the less than third world countries. Please stop it......... First bring the electoral reforms for barring tainted ( civil or criminal) persons to occupy any public offices........ SAVE INDIA...
ரமேஷ் - chennai,இந்தியா
2010-07-21 02:05:38 IST
வாங்குற லஞ்சம் பத்தாது ?...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-21 01:40:04 IST
சம்பளத்தை மட்டும் உயர்த்தினால் போதுமா? லஞ்சத்தையும் உயர்த்த வேண்டும்.பாவம் விலைவாசி உயர்வால் மிகவும் கஷ்டபடுகிறார்கள்....
கே.சுபாஷ். - uralpattiudumalaippettai,இந்தியா
2010-07-21 01:09:19 IST
இவர்களின் தேவை ஐந்து மடங்கு உயரும்வரை நாட்டுக்காக கைக்காசு செலவு செய்துகொண்டிருந்தார்களா? நிச்சயமாக இல்லை! இவர்களுக்கு இவர்களின் ஊதியம் ஒரு பொருட்டே அல்ல என்பதும் மக்கள் அனைவருக்கும் தெரியும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். கணக்கிலடங்கா வரவினங்கள் இருக்கும் இவர்களின் செலவு நெருக்கடி ஐந்து மடங்கு சம்பளம் உயர்த்தவேண்டிய அளவு இருந்தால் இவர்களால் ஏற்படும் எக்கச்சக்க விலைவாசி விலை உயர்வைத் தாங்கமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு யார் ஐந்து மடங்கு உயர்த்தி ஊதியம் தரப் போகிறார்கள்? எல்லோரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையில் இவர்களின் பொறுப்பில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இவர்களே இவர்கள் இஷ்டத்துக்கு ஊரான் காசை எடுத்துக்கொள்வார்களா? இதைக் கண்டித்து எல்லா எம்.பி க்களும் தங்களின் வழக்கமான கலாட்டாவை பார்லிமென்ட்டில் அரங்கேற்றுவர்களா? மக்கள் எப்பவும் பிள்ளைப் பூச்சிகளாக இருப்பார்கள் என்று இவர்கள் நினைத்தால் அது தவறாகப் போய்விடும் ஜாக்கிரதை!...
sinthanaikkiniyan - riyadh,செனகல்
2010-07-21 00:33:04 IST
ஆமா சார் விலைவாசி 3 மடங்கு ஏறி விட்டதுன்னு ஜெயா சொல்லிட்டாங்க.. நாம ஒரு 5 மடங்கு சம்பலத்தை உயர்திகிட்டா என்ன குடி முழுகிட போவுது.. இந்த ஒரு விசயத்தில் மட்டும் எல்லா கட்சியும் ஒற்றுமையா மசோதா நிறைவேற்றும்.. கம்னியூஸ்ட். சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு காட்டும் .. சம்பளம் உயர்த்தியபடி வந்துடும்ல ... நாடு நாசமா போனால் நமக்கென்ன.. எத்தனை கோடி கடன் இருந்தா நமக்கென்ன நாமளா கொடுக்கபோரோம் - ஒரு முழ கொமனமாவது மிச்சம் வைங்கட பாவிகளா......
B.Indian - Bhaaratham,இந்தியா
2010-07-21 00:28:54 IST
எம்.பி.,க்களின் சம்பள உயர்வு முற்றிலும் தேவை இல்லாத ஒன்று. அவர்களின் எல்லா செலவுகளும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. சம்பளம் அல்லாது அவர்களுக்கு கிம்பளமும் கிடைக்கிறது. இவர்களின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் ஏழை எளியோர் உப்பு வாங்கும் போதுக் கொடுத்த வரியில் இருந்தும் ஈட்டப் பட்டது தான். நம் நாட்டிற்கு தேவை ஏழை எளியோரின் முன்னேற்றம். நம் எம்.பி., க்கள் சம்பள உயர்வு இல்லாமலே சுக வாழ்வு வாழ முடியும். இந்த சம்பள உயர்வு கொண்டுதான் வாழ முடியும் என்ற இக்கட்டில் இல்லை....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-21 00:14:39 IST
கோடிகளில் செலவு செய்து தான் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபடுகிறார். எனவே அவர்களுக்கு 80 ஆயிரம் சம்பளம் என்பது நியாயமானதே....
இந்தியன் - chennai,இந்தியா
2010-07-21 00:08:35 IST
For the work they are doing we should give them a raise. what work are they doing they should get more money...

கருத்துகள் இல்லை: