செவ்வாய், 20 ஜூலை, 2010

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 362 முன்னாள் புலி உறுப்பினாகள்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 362 முன்னாள் புலி உறுப்பினாகள்!   
சாதாரண தரப் பரீட்சைக்கு 172 பேர்
அடுத்து வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப்பரீட்சைக்கு 534 முன்னாள் புலி உறுப்பினா;கள் தோற்ற உள்ளனர்.
இடுத்த மாதம்  09 ஆம் திகதி ஆரம்பமாவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளதுடன் டிசம்பரில் நடைபெறவூள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 172 பேர் தயாராகி வருவதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமரவு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவூம் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வூ நிலையத்தில் இவ்விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 252 ஆண்களுக்கு வவுனியா தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும் 110 பெண்களுக்கு பூந்தோட்டத்திலும் அவர்களது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களே இவர்களுக்கான கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றனர். புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 260 பேர் கலைப் பிரிவிலும் 09 பேர் கணிதப் பிரிவிலும் 22 பேர் உயிரியல் பிரிவிலும் 71 பேர் வர்த்தகப் பிரிவிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவூள்ளனரெனவும் ஆணையாளர் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை: