வியாழன், 22 ஜூலை, 2010

போலி என்கவுன்டர,பஸ்சில் இருந்து அழைத் துச் செல்லப்பட்டனர்.

போலி என்கவுன்டர் : குஜராத் அமைச்சருக்கு சி.பி.ஐ., 24 மணி நேர கெடு

குஜராத் உள்துறை அமைச்சர்  அமீத் ஷாவுக்கு போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ., முன்பு ஆஜராக மேலும் 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நாளை ஆஜராகாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்பு நிலவுகிறது. 
"குஜராத்தில் 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, சொராபுதீன் ஷேக் என்பவரும், அவரின் மனைவியும், மற்றொரு நபரும் ஐதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாங்லிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேச போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, அவர்கள் பஸ்சில் இருந்து அழைத் துச் செல்லப்பட்டனர். சொராபுதீன், குஜராத் போலீசின் பயங்கரவாத தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்டு வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொராபுதீன் மனைவி கவுசர் மற்றும் அவர்களுடன் வந்த துல்சிராம் பிரஜாபதி என்பவரையும் கொன்றனர். தடயங்களை அழிப்பதற்காக இவ்வாறு செய்தனர்.என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக, குஜராத் போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பஞ் சாரா, பாண்டியன், தினேஷ் மற்றும் டி.எஸ்.பி., மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டது. போலீஸ் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என சொராபுதீனின் சகோதரர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. 
இந்த வழக்கின் போக்கு முதல்வர் மோடிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சட்டம் எல்லோருக்கும் சமம் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என காங்., கருத்து தெரிவித்துள்ளது.
gs - Khartoum,சுரிநாம்
2010-07-22 15:19:49 IST
நிலத்தை வளைத்து போட்ட நீதிபதி, ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா, இவங்க மேல சட்டம் கருணை காட்டுதே. அவங்களுக்கு வேற சட்டமா.......
கண்ணன் - Salem,இந்தியா
2010-07-22 15:03:52 IST
எனக்கென்னமோ இங்கு தீவிரவாதிகள் மேல் தான் சந்தேகம். போலிஸ் தன் கடமையையை ஒழுங்காக செய்திருக்கும்....
ஷாகுல்hameed - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-22 14:42:05 IST
சட்டம் எல்லோருக்கும் சமம். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்...
Tata Billa - Singapore,இந்தியா
2010-07-22 14:17:34 IST
If CBI proves it realy flake Encounter are they going to punish the Culprits . Nothing going to happen for the victims , Three innocent people died , if there is real justice in India that fuckers should be hanged ....
மு ஷா - Jeddah,செனகல்
2010-07-22 14:15:59 IST
குற்றம் செய்பவர்கள் மன்னராக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்

கருத்துகள் இல்லை: