திங்கள், 7 ஜூன், 2021

பசுவின் பின்பாகத்தை மட்டும்.. சீதாதேலி ஆணையிட்டதால் தான் சங்கிகள் கோமியம் குடிக்கிறார்கள்???

May be an image of standing and outdoors

Gnanabharathi Chinnasamy  :  சங்கிகள் ஏன் கோமியம் குடிக்கிறார்கள் என்பது தெரியுமா?
பீகாரில் உள்ள கயாவிற்கு போய் இருக்கிறீர்களா?
இஸ்லாமியருக்கு மெக்கா போலவும் கிறுத்துவர்களுக்கு வாடிகன் போலவும்  இந்துகளுக்கு  கயா தான் புனிதத் தலைமையகம் என்பது பல முக்கிய  சங்கிகளுக்குக் கூட தெரியாது..
கயா பீகாரில் இருக்கிறது. கயாவில் இறங்கியதும் "இது நக்சலைட்டுகள் நிறைந்த பகுதி" என்று எச்சரிக்கும் அரசின் விளம்பரப் பலகைகளை ஆங்காங்கு பார்க்க முடியும்.
கயாவை ஒட்டி தான் தண்டகாரண்யக் காடு இருக்கிறது...
ஆந்திராவில் இருந்து நேபாளம் வரை நீண்டு இருக்கும் தண்டகாரண்யக் காட்டில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி நடக்கிறது..
ராணுவ நடவடிக்கை மேற்கொண்டும் அந்த அமைப்பை மத்திய அரசால் சிதைக்க முடியவில்லை.


அதனால் தான் இங்கே உள்ள பொன்னார் போன்ற விவரம் கெட்ட சங்கிகள் "கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா" என்று தேர்தல் முடிவுகளை வைத்து வாய் ஜம்பம் அடிக்கும் போது மத்திய. அரசும் மோடியும் தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றி நிறையப் பேசுவார்கள்.
அதன் விளைவு தான் அந்த எச்சரிக்கை போர்டுகள்..
புத்தகயாவிற்கு அருகாமையில் உள்ள கயாவில் மூதாதையருக்கு திதி கொடுத்தால் அதை மூதாதையர்கள் நேராக வந்து பெற்றுக் கொள்கிறார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அங்கு சிரார்தத்ம் செய்யும் பிராமணர்களை பண்டாக்கள்  என்று அழைப்பார்கள்.. அவர்கள்  அங்குள்ள ஒரு மரத்தைக் காட்டி "அங்கே பாருங்கள் உங்கள்  பெற்றோரும்  மூதாதையரும் நீங்கள் தரும் பிண்டதானத்தை பெறுவதற்காக கையை நீட்டிக் கொண்டு நிற்பதைப் பாருங்கள் " என்பான்.நமக்கு புல் அரித்து விடும் "ஐயோ. அவர்களை நீண்டகாலம் நீட்டிய கையோடு காத்திருக்க வைத்து விட்டோமே "என்ற குற்ற உணர்வில் தவிக்க வைத்து விடுவான்..
இந்தப் பண்டாக்கள் பணம் கறப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் ரத்தம் உறுஞ்சும் ஓநாய்கள் என்று நாமக்கல் கவிஞர்  தன் சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார்..
கயா பல்கு நதியின் கரையில் இருக்கிறது.
பல்கு நதி  இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனித நதி..
அதற்குஅருகில் உள்ள கிராமத்தில்  பட்டினி கிடந்து உடலை வருத்தி தியானம் செய்த சித்தார்த்தன் அதைக் கை  விட்டு பல்குநதியை நீச்சல் அடித்து கடந்து சோர்ந்து போய் புத்த கயா வரை சென்று போதி மரத்தின் கீழ்  40 நாள் சிந்தனையில் இருந்த போது தான் ஞானம்  பெறறு புத்தரானார்  என்பது பௌத்தர்களின் நம்பிக்கை..
பல்கு நதி நம் அகண்ட காவேரியை விட அகலமானநதி.. ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பார்க்காத வறண்ட மணல்படுகை.
அது வறண்டுகிடப்பதற்குசீதாதேவியின் சாபம் தான் காரணம் என்பது ஐதீகம்..
வனவாசம் முடிந்து ராமலட்சுமணர்களும்சீதையும் தசரதனுக்கு திதி கொடுக்க பல்கு நதிக்கு வந்தார்களாம்.
அப்போது வற்றாத ஜீவநதியாக இருந்ததாம் பல்கு நதி..
ராம லட்சுமணர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது சீதாதேவி நதியின் கரையில் அமர்ந்து இருந்தாராம்..
அப்போது திடுதிப் என்று பல்கு நதியின் கரையில் இருந்து இறந்து போன  தசரதன் எழுந்து வந்து சீதா தேவியிடம் மிகவும் பசிப்பதாகவும் உடனே பிண்ட தானம்  செய்யும்படியும் கேட்டானாம்.
ராம லட்சுமணர்கள் குளித்து விட்டு  வரும் வரை பொறுத்து இருக்கும்படி சீதாதேவி சொன்னதை தசரதன் கேட்க மறுத்து" 5 சாட்சிகள் முன்னிலையில் மணலையே பிண்டமாகக் கொடு. ராம லட்சுமணர்கள் வந்து கேட்டால் நான் பிண்டம் வாங்கிக் கொண்டு போய் விட்டேன் என்று சாட்சிகள் மூலம் நிரூபித்துக் கொள்"என்று தசரதன் கட்டாயப்படுத்தியதால் சீதாதேவிக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது..
அதனால் அஷ்டவடம்,பல்கு நதி, பசு,துளசிச் செடி, ஒரு பிராமணன் முன்னிலையில் பிண்டம் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு தசரதன் போய் விட்டான்..        
குளித்து விட்டு வந்த ராம லட்சுமணர்களிடம் சீதாதேவி நடந்ததைச்    சொன்ன போது  அவர்கள் அதை நம்பவில்லை.
அதனால் 5 சாட்சிகளையும் அழைக்க வேண்டிய கட்டாயம் சீதாதேவிக்கு ஏற்பட்டது..
அதில் அஷ்டவடம் மட்டும்  சீதாதேவிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தது.
மற்ற நான்கும் ராமனின் கோபத்திற்கு அஞ்சி பொய் சாட்சி சொல்லி விட்டன.
கடும்கோபமுற்ற சீதாதேவி பல்கு நதியை இனி எல்லாக் காலத்திலும் வறண்ட மணற்படுகையாகப் போகும் படி சபித்தாளாம்.அன்று முதல் வறண்டு கிடக்கிறதாம்.
துளசியை இனி கயாவில் முளைக்கக் கூடாது என்று சபித்தாள்.
பார்ப்பனர்களை பொய் சொல்லி தட்சணை என்ற பெயரில் பணம் பறித்தாலும் மனத் திருப்தியும் வயிறு நிரம்பாமல் பட்டினியில் வாடும் ஜென்மங்களாகவும் போங்கள் என்று சபித்தாளாம்..
அவர்கள் சீதாதேவியின் சாபப்படியே வாழ்கிறார்கள் என்பதற்கு நாமக்கல் கவிஞரின் சுயசரிதையே சாட்சி..
பசு மாட்டைப் பொறுத்த வரையில் அதுவரை அது மனிதர்களைப் போலப் பேசிக் கொண்டு இருந்ததாம்..
"இனி உனக்கு பேச்சு வரக்கூடாது " என்று சபித்த சீதா தேவி "உன் உடலின் முன்பகுதி மனிதர்களுக்கு பயன்படக் கூடாது.பின்பகுதி மட்டுமே பயன்பட வேண்டும்"என்றும் சபித்தாளாம்..
பசுவின்பின் பக்கத்தில் இருந்து தான் பால்,சாணம்,கோமியம் கிடைக்கிறது.
சீதாதேவியின் சாபப்படிதான் பின்புறமாய் வெளி லரும் கழிவான கோமியத்தை சங்கிகள்  சுடச்சுட குடிக்கிறார்கள்.
இது மிகவும் அர்த்தமுள்ள கதை..
ராமனுக்கு கோயில் கட்டத் துடிக்கும் சங்கிகளுக்கு நேர்மையற்று காட்டியும் கூட்டியும் கொடுத்து ஒட்டுண்ணிகளாக வாழும்படி பார்ப்பனர்களை  சபித்தததும் கோமாதா என்று இவர்கள் கொண்டாடும் பசுவின் உடலின் பின்பகுதி மட்டுமே பயன்பட வேண்டும் என்று சபித்தததும் அதே ராமனின் மனைவி சீதாதேவி தான் என்பது நகைமுரண்.
பசுவின் உடலின் பின்பாகத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ள சீதாதேலி ஆணையிட்டதால் தான் சங்கிகள் கோமியம் குடிக்கிறார்கள்!!

கருத்துகள் இல்லை: