வியாழன், 10 ஜூன், 2021

மத்திய அரசின் தடையை உடைத்த மா .சுப்பிரமணியம்! கொரோனா தடுப்பூசி கையிருப்பை வெளியே சொல்ல கூடாது.. மத்திய அரசு !

May be an image of 1 person and text that says 'CORONA BREAKING சைத SUN N”S ட DI அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! "தடுப்பூசிகள் கையிருப்பை மக்களிடம் தெரிவிக்க கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், உண்மை நிலையை மக்களிடம் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்; தற்போது 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பில் உள்ளது" SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 10JUN2021 10JUN'

Veerakumar - tamil.oneindia.com :  டெல்லி: கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை வேறு எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்வதை மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.
இது "சென்சிட்டிவ்" டேட்டா என்று மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் மூவ்மென்ட் குறித்து மாநிலங்கள், மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை.
அதேபோல, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் செயல்படுத்தப்படும் மேலாண்மை அமைப்பான எலக்ட்ரானிக் தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பும் ( (EVIN) தடுப்பூசி பற்றிய அப்டேட்களுக்கு பயன்படுகிறது
அப்டேட் 2012-13 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பின்னர், தேசிய முதல் மாவட்டங்கள் வரை தடுப்பூசி சேமிப்பின் அனைத்து மட்டங்களிலும் தடுப்பூசி கையிருப்பு மற்றும் அவை எந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் ஈவின் வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படுகிறது.



திடீர் உத்தரவு ஆனால், தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற மிக முக்கியமான தகவல்களை மாநில அரசுகள் பொது வெளியில் வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு போட்டுள்ளது

மத்திய அரசு கடிதம் இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகா் பிரதீப் ஹல்தாா், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதை பாருங்கள்- தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. மாவட்ட அளவில் இருந்து தேசிய அளவு வரையிலான தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களைக் கண்டறிய அந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெளியே சொல்லக் கூடாது மத்திய அரசுக்குச் சொந்தமான அந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆன்லைனில் வெளியிடக் கூடாது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

கெட்ட பெயர் நாடு முழுக்க தற்போது கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து உச்சநீதிமன்றமும் கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இந்த நிலையில்தான், தடுப்பூசி விவரங்களை வெளியிட கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது

அதேநேரம், மாநிலங்களுக்கு அனுப்பப்படும் வழக்கமான கடிதம்தான் இது என்றும் அனைத்து தடுப்பூசி விஷயங்களிலும் அவ்வப்போது இது அனுப்பப்படுகிறது என்றும் வெறுமனே கொரோனா தடுப்பூசிகளுக்காக வழங்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. "தடுப்பூசி சப்ளை மற்றும் குளிர் சேமிப்பு போன்ற தகவல்களைதெரிந்து கொண்டால் தனியார் நிறுவனங்கள் தங்கள் வர்த்தக லாபங்களுக்கு அதைப் பயன்படுத்த முடியும்" என்று அமைச்சகத்தின் ஒரு அதிகாரி கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசி பற்றி இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஒரு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: