Bilal Aliyar : நேற்று கவிஞர் தாமரையை விமர்சித்த போது பலரிடம் இருந்து அன்பான கேள்விகள் வந்தது…
தாமரை போன்றோர் அரசை பாராட்டுவது நமக்கொன்றும் பிரச்சனையில்லை..
ஆனால் இந்த அரசு என்ற இயந்திரம் பத்தாண்டுகளாக கடுமையான மக்கள் விரோத, மொழி விரோத, சமத்துவ விரோத, சமூகநீதி விரோத அமைப்பாக இயங்கி வந்திருக்கிறது…
அப்போது இந்த அரசு என்ற மக்கள் விரோத அமைப்பை சமரசமின்றி, ஏன் கட்சி வேறுபாடின்றி நாம் அனைவருமே கண்டித்திருக்கிறோம், விமர்சித்திக்கிறோம்.
பல நேரங்களில் ஒன்றிய அரசை ஆதரிக்கும் மேட்டுக்குடியாக தங்களை கட்டமைத்தைக்கொண்ட நண்பர்கள், செயல்பாட்டாளர்கள் கூட அடிமை, ஊழல் அதிமுக அரசை கண்டிக்க தவறியதில்லை.
இன்று ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு மாதம் கூட முடியாத நிலையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட இந்த மாநிலத்தை தூக்கி நிறுத்த நேர்மையுடன் பணியாற்றுகிறது முதல் அமைச்சரின் தலைமையில், வழிகாட்டுதலில்..
இங்கு தான் தாமரையை நாம் வேடதாரியாக காட்டவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.
கடந்த பத்து வருடங்களில் மாநில ஊழல் அரசை எதிர்த்து ஏதேனும் பேசியிருக்கிறாரா?
மாநில உரிமைகள், இந்தி மொழி ஆதிக்கம், தமிழின் பண்பாட்டு சிதைவுகளை எதிர்த்து குரலையோ, தன் பேனாவில் இருந்து ஒரு துளி மையையோ உதறியிருக்கிறாரா என தேடிப்பார்த்தால்,
அது இரும்பு பெண்மணியை குன்ஹா சிறையில் அடைத்ததை எதிர்த்து குரல் எழுப்பியதில் வந்து நிற்கிறது..
ஒளிர்ந்த தமிழ் வாழ்க என்ற பதாகையை சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் உச்சியில் பார்க்கும் போது கண்ணீர் வந்ததாம், கண்ணீர் எப்போது வந்திருக்க வேண்டும்?,
அங்கு ஏற்கனவே இருந்த பதாகையை பாசிச சக்திகளின் பின்னணியில் பெரியப்பா எடப்பாடி நீக்கும் போது வந்திருக்க வேண்டும்..
ஆனால் அப்போதெல்லாம் பெரியப்பாவை தடவி கொடுத்துக்கொண்டே அரசியல் பேசியவர்களில் முதன்மையானவர் தான் நம் தாமரை…
அதுதான் என் விமர்சினத்திற்கான அடிப்படை காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக