சனி, 12 ஜூன், 2021

சிவசங்கர் பாபாவும் யாகவா முனிவரும் சண்டையிட்ட காணொளி காணாமல் போனதெப்படி? சன்டிவி கைவரிசை?

மறைந்த யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் சன்டிவி தொலைக்காட்சியில் விவாதித்த காணொளியை தேடி தேடி பார்க்கிறேன் அது கிடைக்கவே இல்லை
இப்போது சிவசங்கர் பாபா பற்றி எல்லோரும் பேசிய விடயங்களை பெரும்பாலும் அன்றே யாகவா முனிவர் நேரடியாகவே கூறினார்  யாகவா முனிவரின் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்க முடியாமல் பசப்புதனமாக சிரித்து சிரித்து சமாளித்தார் சிவசங்கர் பாபா
ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்க முடியாத யாகவா முனிவர் தனது தோளில் இருந்த துண்டை எடுத்து அடிக்க பாய்ந்தார்
அவர் கூறினார் பாரு பாரு அயோக்கிய பயல என்று அர்ச்சனை பொழிந்தார். 

சரியாக இனம் கண்டுகொண்டார் யாகவா முனிவர்
அதன் பின்பு அக்காட்சியை நடிகர் விவேக்கும் மயில்சாமியும் ஒரு படத்தில் காட்சியாக வைத்தனர்
இப்போது அந்த ஒரிஜினல் காணொளி மிஸ்ஸிங்
சன்டிவி நிர்வாகத்திற்கு பார்ப்பன சகவாசம் தாராளமாகவே உண்டு  அதன் காரணமாக அவர்கள் அதை மறைத்து விட்டார்கள் ....?


நேற்று ஜீவா சகாப்தம் நடிகர் மயில்சாமி வீவேக் காட்சியை பற்றி குறிப்பிட்டு அன்றே இவர்கள் இது பற்றி கூறியிருக்கிறார்கள் என்று சிலாகித்தார்
தோழர் ஜீவா சகாப்தம் ஒரு பெரிய ஊடக அறிமுகம் உள்ளவர்  
அவருக்கே இது ஒரு உண்மை சம்பவம் என்பது தெரியவில்லை  வெறும் சினிமாவில் வந்த காட்சி இது என்று கருதி மயில்சாமியை சிலாகித்திருந்தார்  
எந்தளவுக்கு இருட்டடிப்பு நடந்து இருக்கிறது?
நன்றாக தேடிப்பாருங்கள் இவர்கள் கூட சிவசங்கரன் வாடிக்கையாளர்களக இருந்திருப்பார்களோ  தெரியவில்லை  ..  செல்லபுரம் வள்ளியம்மை

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Veerpandiyan annanai SDPI kartharangula pesunathu velayavittu thookuna SUN TV kaaran RSS paya. Eppothum ivargal RSS supported guys