சனி, 12 ஜூன், 2021

நீட் தடை.. வேக்சின் சப்ளை.. நேராக டெல்லி பறக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமருடன் ஜூன் 17ல் மீட்டிங்

 Shyamsundar - tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் 17 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தொடர்ந்து கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் டெல்லி செல்கிறார். ஜூன் 17ல் அவர் பிரதமர் மோடியை நேராக சந்தித்து பேச உள்ளார்.
கோரிக்கை இதில் நிறைய முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க இருக்கிறார். அதில் நீட் தேர்வு ரத்து மற்றும் வேக்சின் ஒதுக்கீடு பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு போதிய அளவு வேக்சின் வழங்கப்படவில்லை என்று புகார் உள்ளது.
பாஜக உத்தர பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேக்சின் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு போதிய அளவு வேக்சின் ஒதுக்கப்படவில்லை என்று புகார் உள்ளது. வேக்சின் மட்டுமின்றி நீட் தேர்வு தடை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது.



நீட் தேர்வை தடை செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக ஆய்வு குழு ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி அதேபோல் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டியது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். எழுவர் விடுதலை, செங்கல்பட்டில் வேக்சின் தயாரிப்பது, கருப்பு பூஞ்சை மருந்து ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார்.l

கருத்துகள் இல்லை: