நக்கீரன் - நாகேந்திரன் : மலேஷிய நடிகை சாந்தினியின் புகாரையடுத்து வேண்டுமென்றே காயப்படுத்துதல், பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், நம்பிக்கை மோசடி,
ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்,
கொலை மிரட்டல், ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல்,
பகிர்தல் என ஐபிசி 417, 376, 313, 323, 506(ஒ) மற்றும் 67-ஆ ஆகிய பிரிவுகளின் கீழ் மாஜி மந்திரி மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல்துறையினர் வழக்கைப் பதிவுசெய்தனர்.
"குடும்பத்துல உள்ள ஆட்களால்தான் எனக்கு நிம்மதி என்பதே கிடையாது.
இந்த பிரச்சனையில் என்னைக் கண்டுக்காமல் இருந்திருந்தால் இந்தளவு போயிருக்காது.
மானக்கேடான விஷயம் என அந்தாளு (செ.முருகேசன் -அவைத்தலைவர் -ராமநாதபுர மாவட்ட அ.தி.மு.க.) சொன்னதால, அவரு பேச்சைக் கேட்டு சென்னையிலுள்ள வக்கீல் ஆபீசுக்குப் போய் சமாதானம் பேசினேன்.
அப்படியே விட்டுருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்ப தலைவலி யாருக்கு? தனியாக யாருக்கும் தெரியாமல் இப்படி இருக்கணும்னு என்ன அவசியம்?'' என பரமக்குடியைச் சேர்ந்த அந்த முன்னாள் பி.ஏ.விடம் மனம்விட்டுப் பேசியிருக்கின்றார் மாஜி மந்திரி மணிகண்டன்.
வழக்கினை பதிவுசெய்த கையோடு துணைஆணையர் ஜெய லட்சுமி மேற்பார்வையில், ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணையை மேற் கொண்டுள்ளார். விசாரணையில், மாஜி அடித்து துன்புறுத்தியதால் கண் ணில் ஏற்பட்ட காயத்திற்கு சாஸ்திரி பவன் அருகிலுள்ள எம்.என். கண் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிரிஸ்கிரிப்ஷன், கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருணிடம் நடிகை சாந்தினி பேசிய 23:26 நிமிட குரல் பதிவு, மணி கண்டனின் பாஸ்போர்ட், மணிகண்டனுடன் நெருக்கமாக இருந் ததற்கான பல அடையாளங்களைச் சேகரித்துள்ளது அடையாறு மகளிர் காவல்துறை. இதேவேளையில், மாஜி மணிகண்ட னும், வழக்கறிஞர் குணசேகரனும் சமாதானம் பேசுவதற்காக சாந்தினியின் வழக்கறிஞரான சுதனின் சைதாப்பேட்டை அலுவலகத்திற்கு 23-05-2021 மாலை 04.29 மணியளவில் சென்றதும், இரவு 07.13 மணியளவில் வெளியேறிய சி.சி.டி.வி. காட்சிகளும் மாஜிக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
"கைது பயத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ராமநாதபுரத்திலிருந்து வெளியேறிய மாஜி மணிகண்டன், கிழக்கு கடற்கரைச்சாலையின் வழி யாகவே பயணித்து, இரவில் மீன்சுருட்டி பகுதியிலுள்ள சாதிக்காரர் ஒருவரின் அரவணைப்பில் தங்கிவிட்டு, மறுநாள் அங்கிருந்து திருவாரூர் பயணித்து கமலமுனியை தரிசித்து சென்னைக்கு சென்றுள்ளார்'' என்கின்றனர் முதுகுளத்தூர் தூரிப் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள். எனினும், ராமநாதபுரத்தையே சுற்றிவருகிறது சென்னை காவல்துறை தனிப்படை.
mani
இந்நிலையில், செவ்வாயன்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக்கை சந்தித்த மாஜி மந்திரி மணிகண் டனின் மனைவி வசந்தியோ, "எங்கள் குடும்பத்தினரின் நிம்மதியை, புகழைக் கெடுப்பதற்காகவே என் கணவர் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றார் சாந்தினி. அமைச்சரின் மனைவி என்ற பெயரில் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்த்ததாகவும், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியதாகவும், கருக் கலைப்பு மிரட்டலென்றும் அவர் கூறியது அனைத்தும் முற் றிலும் பொய். அந்த நடிகைக்கு பயன்படுத்தியதாகக் கூறப் படும் TN65 AL 4777 எண்ணுள்ள கார் என்னிடமே உள்ளது'' எனக் குமுறிவிட்டு, தென்மண்டல ஐ.ஜி., டி.ஜி.பி., முதலமைச்சர் தனிப்பிரிவு என அனைவருக்கும் நகல் அனுப்பியதைக் காட்டி, அந்த நடிகை மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதனை அப்படியே அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி ரிலாக்ஸானார் எஸ்.பி. கார்த்தி. மாஜி மந்திரி மணிகண்டனின் மனைவி வசந்தியை தொடர்புக்கொண்டோம். அழைப்பை ஏற்கவில்லை. இவ்வேளையில், தலைமறைவாக இருக்கும் மாஜி மணிகண்டனோ, முன்ஜாமீன் கேட்டு புதனன்று (02-06-2021) சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுதாக்கல் விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், "தான் திருமண மானவர் என்பதை 27 வயது நிரம்பிய புகார்தாரர் அறிவார். பாலியல் உடலுறவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் அவருக்கு உறவின் விளைவுகளும் தெரியுமென்பதால் ஐ.பி.சி. 417 மற்றும் 376 ஆகியன பொருந்தாது. அதுபோல், தானாக முன்வந்து கருக்கலைப்பு செய்திருப்பதால் 313-வது பிரிவும் பொருந்தாது. 323 பிரிவின்கீழ் வேண்டு மென்றே காயப்படுத்துதல் என்பதற்கான மருத்துவச் சான்றை சமர்ப்பிக்கவில்லை.
பரணி என்பவர் மூலமாக அறிமுகமாகி, தன் பெற்றோரின் மருத்துவ உதவிக்காக, தான் அளித்த 5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதற்காகத் தன்னை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும், மலேஷியாவிலும் இப்படி மோசடி செய்ததாகவும்'' தனது அபிடவிட்டில் மாஜி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.
-நாகேந்திரன்
மாஜி மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவே, நடிகைக்கும், அவருக்குமான நெருக்கத்தைக் கூறிவிடுகிறது. இது, "மாப்பிள்ளை அவருதான்... அவரு போட்டிருக்குற சட்டை என்னோடது' என்ற "படை யப்பா' காமெடியை நினைவுபடுத்துகிறது. இன்னொருபுறம், "காவல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். நாங்கள் வெளியிட்ட ஆதாரம் வெறும் 25 சதவிகிதம்தான். தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவோம்'' என்று மாஜியின் பல்சை மேலும் மேலும் எகிறவிடுகின்றனர் நடிகை சாந்தினியின் உற்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக