ஞாயிறு, 6 ஜூன், 2021
கருப்பு பண கொள்ளை... நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை .. Black money case Suresh Gobi
nakkeeran :
திருச்சூர்,
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்காக அனுப்பிய ரூ.3½ கோடி, வாகனத்தில் கொண்டு செல்லும்போது கொள்ளையடிக்கப்பட்டது. இது கருப்பு பணம் என்று கூறப்படுகிறது.
இந்த கொள்ளை தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரனின் உதவியாளர், டிரைவர் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழுவினர், அடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது கேரள பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக