சனி, 12 ஜூன், 2021

மலேசியா Sybil Medan Kathigasu.. நினைவு தினம். (12 ஜூன் 1948)

May be an image of outdoors and text that says 'SERVICES JALAN SYBıL KATHIGASU மன்னன் POSKOD 31400 TMN. IPOH மதுரை'

May be an image of 1 person

Subashini Thf  :  மலேசியம் - வாட்ஸ்அப் குழுமத்தில் கென்னடி ஆறுமுகம் என்பவர் எழுதிய பதிவு. மலேசியாவில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானியர்கள் செய்த கொடுமையை இந்தப் பதிவும் ஓரளவு விளக்கும்.
கூடுதல் தகவலுக்கு விக்கிபீடியா செய்தி. -https://en.m.wikipedia.org/wiki/Sybil_Kathigasu//
இன்று ஜூன் 12 இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியரை எதிர்த்துப்
போராடிய, மலேசிய சீனர்களால் “தியாகி” என போற்றப்படும் இங்கிலாந்து அரண்மனையில்
பேரரசர் George VI  ல் “George Medal” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட  Irish வம்சாவழியைச் சேர்ந்த
இலங்கைத்தமிழர் Dr. ஆறுமுகம் கணபதி பிள்ளையின் மனைவியும், செவிலியருமான Sybil  Medan  Kathigasu..  நினைவு தினம். (12 ஜூன் 1948)
இவரது கணவர் Dr. ஆறுமுகம் கணபதி பிள்ளை கிறிஸ்துவராக மாறி Abdon Clement Kathigasu எனப் பெயர்மாறினார்.


இவரை கௌரவிக்கும் விதமாக மலேசிய அரசு ஈப்போ நகரில் உள்ள ஒரு  சாலைக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது,
ஜப்பானியர்களுக்கு எதிராக போராடியவர்களை இவர் காட்டிக்கொடுக்காததால் சுமார் மூன்று மாதங்கள் சிறையில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டார். இவர் சிறையில் பட்ட சித்ரவதைகளில் சில……..
வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்.
தூங்க விடாமல் செய்தல்.
தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்தல்.
மூச்சு நின்று போகச் செய்தல்.
புகையிலையை வாயில் திணித்தல்.
ஐஸ் கட்டியில் பல மணி நேரம் உட்கார வைத்தல்.
மயக்கம் அடையும் வரை முட்டிக் காலில் அடித்தல்.
காலைக் கட்டித் தொங்க விடுதல்.
புகை மூட்டம் போட்டு மூச்சு திணறச் செய்தல்.
உடல் மீது ஏறி நின்றுகொண்டு மிதித்தல்.
பிறப்பு உறுப்பில் சோப்பு நீரைப் பாய்ச்சுதல்.
பழுத்தக் கம்பியால் உள்ளங்காலில் சுடுதல்.
நகத்தைப் பிடுங்குதல்.
பிடுங்கிய நக விரலில் ஊசியைப் பாய்ச்சுதல்.
நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தல்.
நாள் முழுவதும் தலை கீழாகத் தொங்க விடுதல்.

கருத்துகள் இல்லை: