செல்லபுரம் வள்ளியம்மை ::அநேகமாக 77 ஆம் ஆண்டுவரை லண்டன் பிராங்க்பெட் போன்ற ஐரோப்பிய நகரங்களில் இருந்து குறைந்த பட்சம் டெல்லிவரை வந்து போகும் பேருந்து சேவைகள் இடம்பெற்றிருந்தன.
டெல்லியில் அப்பேருந்துகளை நிறுத்திவிட்டு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்வார்கள் . மீண்டும் இப்பிரயாணிகள் டெல்லி வந்து அங்கிருந்து ஐரோப்பியாவுக்கு சென்று விடுவார்கள்
இவர்கள் பெரும்பாலும் ராமேஸ்வரம் வரை வந்து அங்கிருந்து ராமானுஜம் கப்பலில் இலங்கை வருவார்கள்
சிலர் இந்தியாவில் கார் வாங்கிக்கொண்டு அந்த காரையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு இலங்கை வரும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஈரானில் அயத்துல்லா கோமினியின் இஸ்லாமிய தீவிர வாத ஆட்சி ஏற்பட்ட பின்பு இது நின்றுபோனது
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கு இடையேயான சாதாரண மக்களின் தரைப்போக்கு வரத்தை நிறுத்திய பெருமையும்???? அந்த சர்வாதிகாரிக்கே உரியது.
அப்போது அந்த பேருந்தின் கட்டணம் வெறும் ஐம்பது டாலர்கள் மட்டுமே
அப்போது இலங்கையில் டாலரின் மதிப்பு வெறும் நாலு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே.
நான் கூட இந்த வழியைதான் நம்பி அப்போது டெல்லி வரை வந்தேன்
திரும்பி செல்ல முடியாமல் அங்கங்கே சில பேருந்துகளும் கார்களும் அநாதரவாக நின்றதை கண்டிருக்கிறேன் .
அந்த வாகனங்களை இந்தியர்கள் வாங்க முடியாது . ஆனால் வெளிநாட்டவர்கள் வாங்க முடியும் .ஒரு ஐரோப்பியர் தனது மஞ்சள் நிற பென்ஸ் காரை வெறும் நூறு டாலர்களுக்கு வாங்குமாறு என்னிடம் கேட்டார் நானே ஊரை விட்டு எங்கோ போய்கொண்டு இருக்கிறேன் அய்யா என்று அவருக்கு கூறினேன்.
Shanmugasamy Ramasamy : ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக