செவ்வாய், 8 ஜூன், 2021

திடீர்னு வார்டுக்கள் நுழைந்து.. "நல்லா இருக்கீங்களா".. மலைக்க வைத்த கனிமொழி

 Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று "எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?" என்று நலம் விசாரித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..
அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.
இதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்.. இதில் ஒன்று வீடு, இன்னொன்று ஆபீசாக மாற்றியுள்ளார்..


அதனால், அந்த வீட்டில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கோரிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள்.. யார் யார் எந்த கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்ந்து வருகிறத

கிராமம், கிராமமாக செல்கிறார்.. வீடு வீடாக செல்கிறார்.. இதனால், ஏராளமான இளம் பெண்கள், முதியோர்களை சந்தித்து, தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது,
தடுப்பூசியினால் என்னென்ன நன்மைகள், என்றெல்லாம் பொறுமையாக எடுத்து விவரிக்கிறார்...
அந்த வகையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது திடீரென கொரோனா பாதுகாப்பு டிரஸ் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார் கனிமொழி.

அங்கே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார்...
முதலில் மருத்துவமனையை ஆய்வு செய்யதான் சென்றார்..
ஆனால், சிகிச்சை பெற்றும் நோயாளிகளுக்கான தேவைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நேரிலேயே விசாரிக்க வேண்டும் என்பதாலேயே பாதுகாப்பு உடை அணிந்து வார்டுக்குள் சென்றுள்ளார்
கவச உடையுடன் கனிமொழி வார்டுக்குள் நுழைந்ததுமே, சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடைய செல்போனில் இதை போட்டோ எடுத்துவிட்டார்..
அதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது!

இப்படித்தான், நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி.. டிசம்பர் மாசமே தன்னுடைய பிரச்சாரத்தை முதல்நபராக தொடங்கிவிட்டார் கனிமொழி.. பிரச்சாரத்தின் கடைசி நாளின் பொது கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது...
இதனையடுத்து, ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் நீங்கள் ஓட்டுப்போட போக வேண்டாம் என்று அட்வைஸ் தந்திருந்தார்கள்.

ஆனாலும் கனிமொழி விடவில்லையே.. பாதுகாப்பு உடைகள் அணிந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வாக்குச்சாவடி சென்று தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.. இப்போதுள்ளதைவிட அப்போது தொற்று வீரியம் அதிகமாக இருந்தது..
பாதுகாப்பு கவசத்துடன் கனிமொழி ஓட்டுப்போட வந்தது, தைரியமான செயலாக பார்க்கப்பட்டது.. மக்களிடமும் பேசப்பட்டது.. போட்டோ போட்டோ இப்போதும் அதுபோலவே, பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தை கண்டு தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாராட்டி வருகின்றனர்.. இந்த போட்டோதான் இணையத்தில் சுடசுட வைரலாகி கொண்டிருக்கிறது..!

கருத்துகள் இல்லை: