சனி, 12 ஜூன், 2021

ஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலையை உலகுக்கு காட்டிய 18வயுது யுவதிக்கு புலிட்சர் விருது !

thesamnet.co.uk - அருண்மொழி :: சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது,
அமெரிக்கா ஊடகவியலாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 ஆம் ஆண்டு முதல் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த  விருதுகளுள் ஒன்றான இந்த விருது இவ்வருடம்  அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளொய்ட் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை,
உலகிற்கு அடையாளம் காட்டிய 18 வயது யுவதிக்கு 2021 ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020 மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் பிளொய்ட் (46) என்ற கறுப்பினத்தவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்த டெர்ரக் சாவின் (44) என்ற காவல்துறை அதிகாரி, அவரை மண்டியிடச் செய்து கழுத்தில் முழங்காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளொய்ட் உயிரிழந்தார்.



இந்த சம்பவத்தின் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டம் வெடித்ததுடன், பல நாடுகளிலிருந்து கண்டனங்கள் வலுத்தன. சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை அப்போது 17 வயது யுவதியான டார்னெல்லா ஃபிரேசியர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜோர்ஜ் பிளொய்டின் கொலை, வெளி உலகிற்கு தெரியவருவதற்கு அக்காணொளி மிக முக்கியமான காரணமானது.

உலகம் முழுவதும் பரவிய இந்த காணொளி, இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: