புதன், 9 ஜூன், 2021

இலங்கை வரலாற்றில் சீன தேச இளவரசி...

May be an image of 1 person, standing, flower and indoor
May be an image of 1 person and outdoors

Sivalingam Sivakumaran  :   இலங்கை வரலாற்றில் சீன தேச இளவரசியின் வரலாற்று பின்னணி  ...
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி சீனாவின்  தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களின்  படம் ஒன்றை, பி.ஆர்.ஐ.எஸ்.எல் தனது டுவீட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது..  
சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோகன்ன உட்பட சீன அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் நிற்கிறார்.  இலங்கை கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட 6 ஆம் பராக்கிரமபாகுவின் 19 ஆவது தலைமுறை வாரிசான  இலங்கை இளவரசி 'சு ஷி இன்'  உம் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அந்த பதிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கை இதிகாசத்தின் படி 15 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட இளவரசர் ஒருவர் சீன நாட்டு பெண்ணை மணந்த பின்னர் சீனாவிலேயே தங்கி விட்டார். அவரின் நேரடி வம்சாவளியில் வந்த இளவரசியே  சூ ஷி ஹின் 

…........  
இலங்கையின்  வரலாற்றாசிரியர்கள்  , மகாவம்சத்தை ஆதாரம் காட்டும் மகா சங்கத்தினர் ஏன் இது வரை மௌனமாக இருக்கின்றனர் என்பது புரியவில்லை....
பி.ஆர்.ஐ.எஸ்.எல் என்றால்  Belt & Road Initiative Sri Lanka (BRISL) சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கையும் உள்ளது. அதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரத்தியேக இணையம் மற்றும் சமூக ஊடக கட்டமைப்பு ஆகும்.

கருத்துகள் இல்லை: