செவ்வாய், 8 ஜூன், 2021

இலங்கை இனக்கலவரங்களில் இந்திய முதலாளிகளின் வரலாற்று பங்களிப்பு

Rubasangary Veerasingam Gnanasangary  :  அதைவிட மோசமானது ஒன்று சிங்களப் பகுதிகளில், அதுவும் கண்டிய இராச்சியத்தில் தமிழ் குடியேற்றம் நடந்தமையை வசதிக்காக எவரும் பேசுவதில்லை.
சிங்கள மக்களில் சேனை பயிர் செய்யும் விவசாய மற்றும் காட்டு நிலங்களை ஏமாற்றியும் கட்டாயப் படுத்தியும் நிலங்களை அபகரித்து,
தேயிலைத் தோட்டங்கள் அமைக்க தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் வரவழைக்கப் பட்டதே நாட்டின் முதல் பிரச்சனை.
கொழும்பு வாழ் தமிழ் முதலாளிகள் குறிப்பாக செட்டிகள் மற்றும் தமிழ் நாட்டு இடைத் தரகர்கள் என்று பலரும் சிங்கள மற்றும் தமிழர்கள் இரு தரப்புக்களையுமே ஏமாறி உள்ளனர்.
Kothai Sengottuvel  :  உண்மையான பிரச்சனைகள் பேசப்படாமல் இன வெறுப்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதையே அரைகுறைகள் தமிழ்நாட்டிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள
Rubasangary Veerasingam Gnanasangary    :  இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் தமிழ் இனவாதம் எனபது ஐம்பது வீதத்துக்கும் குறைவானது.
சிங்களவர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இனவாதிகள் தங்களை ஒன்றிணைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அவ்வளவுதான்.   

Radha Manohar :இலங்கையின் பொருளாதாரம் இந்திய முதலாளிகளின் கைகளிலேயே பெரிதும் தங்கி இருந்தது  தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு அது ஒரு முக்கிய காரணம்  
இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல கொழும்பிலும் கண்டி மலையகம் போன்ற இடங்களில் எல்லாம் பெரும் வர்த்தகங்கள் இந்தியர்களின் கையில்தான் இருந்தன


சிங்களவர்களின் இந்திய விரோத மனோ நிலைக்கும் இது முக்கிய காரணம்
சாதாரண சிங்கள மக்களை ஒரு மனிதராக மதிக்காத தன்மை இந்த முதலாளிகடம் இருந்தது ஒன்றும் இரகசியம் அல்ல.
உதாரணத்திற்கு சிலவற்றை கூறுகிறேன்
இலங்கையின் மிகப்பெரும் துணி உற்பத்தி ஆடை உற்பத்தி நிறுவனங்களாக இரண்டு கம்பனிகள் கோலோச்சின .
ஒன்று ஞானம் நாடாரின் சென்ட் அந்தனீஸ் ஹாட்வெயார் அண்ட் சின்டெக்ஸ் துணி ஆலை ( இலங்கையில் அதிக விற்பனையை கொண்ட வீரகேசரி பத்திரிகையும் இவரின் உடமைதான்
அடுத்தது ஜபாஜி பிரதேர்ஸின் துணி ஆலை ( முதலாளி பெயர் இப்ராகீம் ஜபாஜி.( மும்பாய்).ஈவு இரக்கமே இல்லாதவர் . பின்பு இனக்கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்)
இலங்கையின் தொழில் வர்த்தக துறையை இந்திய முதலாளிகளிடம் இருந்து மீட்கும் நோக்கத்திலேயே இனக்கலவரங்கள் அடிக்கடி நடந்தது
அப்போதெல்லாம் இந்த கலவரங்கள் தமிழர் பகுதிகளில் நடக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும் 

கருத்துகள் இல்லை: