ஞாயிறு, 6 ஜூன், 2021

சுப்ரமணிய ஸ்வாமி அறிவாளியும் அல்ல கோமாளியும் அல்ல. கடைந்தெடுத்த அயோகியர்.

May be an image of 1 person and sitting

சுமதி விஜயகுமார் : 'தமிழ் பொறுக்கிகள்' இதை சொன்னவர் யாரோ எல்லாம் இல்லை. கடந்த 47 ஆண்டுகளாய் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராய் இருந்து வருபவர்.
இந்திய திட்ட குழு , கேபினட் மினிஸ்டராகவும் இருந்தவர்.
சர்ச்சைக்கு பெயர் போனவர்.
சுப்ரமணிய ஸ்வாமி. நியூஸ் 7 தமிழில் சுப்ரமணிய ஸ்வாமியின் கதை வெளியானது.
ஈடு இணையற்ற ஒரு அரசியல் போராளியை போல சித்தரித்திருந்தார்கள்.
உண்மையில் அவர் ஈடு இணையற்ற போராளிதானா என்று தேடி பார்க்கும் பொழுது தான், அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு பயந்தும், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் பயந்து நாட்டை விட்டும் மாநிலத்தை விட்டும் பயந்து ஓடிய கதைகள் கண்ணில் பட்டன.
அவர் வைக்கும் சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சனங்களை வைத்து அவர் அறிவில்லாதவர் ( பேச்சு வழக்கில் சொல்வதென்றால் 'லூசு') என்ற வாதம் முன்னிறுத்தப்படும்.
ஆனால் அவர் போராளியுமில்லை , அரை வேற்காடும் இல்லை. மூளை முழுவதும் வஞ்சமும் சூதும் நிறைந்தவர். சுப்ரமணிய ஸ்வாமியை ஒரு whistle blower ஆக பார்க்கலாம்.



அதாவது தவறு நிகழும் இடங்களையும் , மனிதர்களையும் சுட்டி காட்டுவது. ஆனால் அவர் வெறும் whistle blower இல்லை . selective whistle blower. தன் சித்தாந்தத்திற்கும் தன் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றவாறு குற்றம் சாற்றுவது.

மதுரையில் பிறந்திருந்தாலும் அவரின் தந்தையின் பணி நிமித்தமாய் புது டெல்லிக்கு இடம் பெயர்த்தவர். பல அரசியல் தலைவர்களுக்கும் இல்லாத கல்வி தகுதி பெற்றவர். புகழ் பெற்ற Harvard பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கல்வி முடிந்தது அதே பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர். அவரை இந்தியாவிற்கு அல்லது வந்தார் யார் என்றும் , வாய்ப்பு கொடுத்தவர் யார் என்றும் பார்த்தால் நம் புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியாது. Jean Dreze யுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை தரவுகளுடன் எழுதிய , பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 ஆம் ஆண்டு பெற்ற திரு அமர்த்திய சென். சுப்ரமணிய ஸ்வாமியை Delhi School of Economicsல் பணியாற்ற அழைத்தார் சென். அவரின் சொல்லை ஏற்று இந்தியா வந்தார் ஸ்வாமி. அங்கு பதவி ஏற்று பணியாற்றும் முன்னரே அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஸ்வாமியின் முதலாளித்துவ பொருளாதார கொள்கை, இந்தியாவின் சோசியலிச கொள்கையுடன் முரண் பட்டிருந்ததால் அந்த வாய்ப்பு கடைசி நிமிடம் ரத்தானது. இடதுசாரி ஆதரவாளர்களின் கடும் எதிர்பால் நியமனத்தை ரத்து செய்தார் சென்.

அதன் பின்னர் டெல்லி IIT யில் பணியாற்றினார். அவருக்கு தகுதியின் அடிப்படையில் அந்த வாய்ப்பை வழங்கியவர் அன்று IIT செலேச்டின் கமிட்டி chairmanஆக இருந்த முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங். அதிலும் அதிக காலங்கள் நீடிக்க முடியவில்லை ஸ்வாமியால். 1972 ல் அந்த பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார் ஸ்வாமி. தலைமை அமைச்சர் இந்திரா காந்தியின் பொருளாதார கொள்கை , ரஷ்யா அரசின் கட்டளையின் படி இருக்கிறது என்பதாக விமர்சித்ததை அடுத்து அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை அடுத்து வந்த அவசரநிலை காலத்தில் அசரின் அடக்குமுறைக்கு பயந்து இந்தியாவியில் இருந்து தப்பித்து சென்றார். 1990 களில் பணியமர்த்தப்பட்டார்.


அதே போல, Harvard பல்கலைக்கழகத்தில் மீண்டும் பொருளாதார துறையில் 2011 ஆண்டு வரை பணி செய்தார். இந்த முறை சுப்ரமணிய ஸ்வாமியே அந்த பதவியில் இருந்து விலகவில்லை. மாறாக Harvard பல்கலைக்கழகமே அவரின் சேவை போதும் என்று வீட்டிற்கு அனுப்பியது. அவரை பல்கலை கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று 400 கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்ட மனுவை சமர்ப்பித்தனர். அதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. சுப்ரமணிய ஸ்வாமி இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தார். அதில் சிறுபான்மை சமூகமாக இருக்கும் இஸ்லாமியர்களை சாத்தான்களாகவும் உலகெங்கிலும் உள்ள மசூதிகளை இடித்து தள்ள வேண்டும் என்றும் குறிப்பிடருந்தார். இதனால் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

தன் உடலெல்லாம் மூளை என்று சுப்ரமணிய ஸ்வாமி சிலாகித்து கொள்வதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த அறிவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் ஸ்வாமி தவறி விட்டார். மொழி புரட்சிக்கு அடுத்து தமிழ்நாடு ஒன்றாக திரண்டெழுந்தது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான். அதை எதிர்த்து சுப்ரமணிய ஸ்வாமி ட்விட்டரில் பதிவிட , தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக troll செய்தனர் . அதனை அடுத்து தான் தமிழ்நாடு மக்களை தமிழ் பொறுக்கிகள் என்று குறிப்பிட ஆரம்பித்தார் இந்த ஸ்வாமி. அதனை அடுத்து தமிழ்நாடு மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட , தமிழ்நாடு மீண்டும் துடித்து எழுந்தது. அப்போது 'தமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில் மறைந்து வாழ்வதை விட்டுவிட்டு,கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும்' என்று ட்வீட் செய்தார் ஸ்வாமி.

இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் தலைமைறைவாய் இருந்த சுப்ரமணிய ஸ்வாமி நாடாளுமன்றத்திற்கே சென்று அரசை விமர்சித்தார் என்று நியூஸ் 7 செய்தி வாசித்தது. ஆனால் அவர்கள் சொல்ல மறந்த ஒரு வரலாறு இருக்கிறது.தமிழ்நாடு அவரை மேசைக்கு அடியில் ஒளிய வைத்த வரலாறு. சிதம்பரம் நடராஜர் கோவில் , அதாவது தமிழில் திருவாசகம் பாட கூடாது என்று முதுபெரும் பக்திப்பழமான ஆறுமுக அடிகளாரை குண்டு கட்டாக தூக்கி வெளியில் எறிந்த , பணம் கொடுத்ததும் அர்ச்சனை ஒழுங்காக செய்யவில்லை என்று கூறியதற்காக ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்த , பார்ப்பன கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலை தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து பார்ப்பனர்கள் மேல் முறையீடு செய்தார்கள். அதில் தன்னையும் ஒரு வாதியாக இணைக்க கோரி சென்னை வந்தார் சுப்ரமணிய ஸ்வாமி. 

அந்த சமயம் இலங்கை தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொள்ள பட்டு கொண்டிருந்தார்கள். அதை எதிர்த்து தமிழ்நாடு கொதிப்பில் இருந்தது. அந்த போராட்டத்தை தொடர்ந்து கொச்சை படுத்தி வந்த சுப்ரமணிய ஸ்வாமி சென்னை வரவே, அங்கு போராட்டத்தில் இருந்த வழக்குரைஞர்கள் முட்டையாலேயே ஸ்வாமியை அடித்திருக்கிறார்கள். பயந்து போன ஸ்வாமி நீதிமன்ற வளாகத்தில் ஒரு மேஜைக்கு அடியில் ஒளிந்து பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் வீடு சென்றார்.

ஜெயலலிதா A1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வழக்கை முன்னெடுத்தவர் சுப்ரமணிய ஸ்வாமி. அதே ஸ்வாமி தான் 2G வழக்கில் ஆ ராசாவையும் கனிமொழியையும் குற்றமற்றவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், மேல் முறையீடு செய்வேன் என்று சொன்னார். திமுக, ஜெயலலிதா மட்டும் இல்லை , தன்னை இந்தியாவிற்கு அழைத்து வந்த அமர்த்திய சென் மீதே ஊழல் வழக்கு தொடந்தவர் சுப்ரமணிய ஸ்வாமி. மற்றவர்கள் மேல் வழக்கு தொடுக்கும் ஸ்வாமி எவ்வளவு நேர்மையானவர் என்றால் நமக்கு படபடப்பு அதிகரிக்கும். காந்தி, இந்திரா காந்திக்கு அடுத்து குலைநடுங்க வைக்கும் ஒரு அரசியல் படுகொலை என்றால் அது ராஜிவ் காந்தி படுகொலை தான். மிக சரியாய் 30 ஆண்டுகளாக, குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, சிறையில் 7 தமிழர்கள் இருக்கும் அதே வேளையில் அந்த குற்றத்தை புலனாய்வு செய்த ஜெயின் கமிஷனில் விசாரிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கும் சுப்ரமணிய ஸ்வாமி இதுவரை விசாரிக்க படவேயில்லை. அந்த படுகொலையில் சுப்ரமணிய ஸ்வாமிக்கு ஒரு வகையில் பங்கு இருக்கிறது என்று அவருடனேயே இருந்த காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி ஒரு புத்தகம் எழுதியதுடன் தொடர்ந்து பேசியும் வருகிறார்.

சர்வதேச பின்னணியுடேனேயே அந்த படுகொலை நடந்திருக்கிறது என்ற வாதங்கள் இந்த கட்டுரைக்கு பொருத்தமில்லாதது என்பதால் , அந்த வாதத்தை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு , தமிழ்நாட்டில் அந்த படு கொலை என்ன விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இன்றைய தேவை. 1987ல் MGR மறைவு வரை திமுகவால் மீண்டும் ஆட்சி அரியணையில் அமர முடியவில்லை. MGR மறைவிற்கு பின் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த திமுக புலிகளுக்கு ஆதரவு அளித்ததாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 

அதுவரை பெரிதாக ஒரு அரசியல்வாதியான ஜெயலலிதா அனுதாப அலையில் முதலமைச்சர் ஆனார். அதற்கும் இன்றைய அரசியலுக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றால் சுப்ரமணிய ஸ்வாமியின் அரசியலும் அவரின் வன்மமான பேச்சுகளும் , சம்மந்தம் இருக்கிறது என்றே அழுத்தமாக சொல்கிறது.

ஒவ்வொரு முறையும் தான் ஒரு மேட்டு குடியில் மட்டுமில்லை , தான் பிரமனின் தலையில் இருந்து பிறந்த பிராமணன் என்று சந்தர்ப்பம் கிடைக்காத போது கூட அதை குறிப்பிட்டு புழுங்காகிதம் அடைபவர் ஸ்வாமி. தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களும் சேர்வார்கள் என்று தான் தந்தை பெரியார் தன் சுயமரியாதை இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார். பல பார்ப்பனர்களும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேளையில் ஒட்டுமொத்த தமிழர்களையும் பொறுக்கிகள் என்று சொன்ன ஸ்வாமி , பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று பறைசாற்றுவதாகவே இருக்கிறது. மோடி தன்னை chowkidhar (காவலர்) என்று சொல்ல , ராகுல் காந்தியோ 'மேரா prime minister chor' என்று ட்ரெண்ட் செய்தார். அதை குறிப்பிட்டு சுப்ரமணிய ஸ்வாமியிடம் கேள்வி எழுப்பிய போது ' நான் chowkidhar எல்லாம் இல்லை . நான் பிராமணன்' என்றார்.

சுப்ரமணிய ஸ்வாமி chowkidharம் இல்லை chorம் இல்லை தமிழரும் இல்லை இந்தியரும் இல்லை. அவற்றிக்கு எல்லாம் மேலான பிராமணர். அந்த பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த திமுக ஆட்சி என்றால் ஸ்வாமிக்கு எப்போதும் கசக்கத்தான் செய்கிறது. ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபித்த சுப்ரமணிய ஸ்வாமி தான் , திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுத்திருந்த MGR என்னும் மாய பிம்பத்திற்கு அடுத்து அதே ஜெயலலிதாவை ஆதரித்தவர். பின்னாளில் தன்னை ஆதரித்த சுப்ரமணிய ஸ்வாமியை தமிழ்நாட்டில் இருந்து ஓட ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது மற்றொரு கதை.

10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக, மிக சிறப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் 'இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்' என்றிருக்கிறார் சுப்ரமணிய ஸ்வாமி. அப்படி என்ன திமுக செய்து விட்டது என்றால் , பதில் இல்லை. PSBB என்னும் பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறது காவல் துறை. அதற்கு எதற்கு திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சுப்ரமணிய ஸ்வாமி சொல்கிறார் என்றால் அது தான் 2000 வருடமான ஆரிய திராவிட போர். PSBB அறங்காவலர்கள் யார் யார் , எந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அங்கு முன்னுரிமை கொடுக்க படுகிறது, பிற வகுப்பு மாணவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்தாலே தெரியும் , சுப்ரமணிய ஸ்வாமி எதற்கு இப்படி துடிக்கிறார் என்று.

சுப்ரமணிய ஸ்வாமி அறிவாளியும் அல்ல கோமாளியும் அல்ல. கடைந்தெடுத்த அயோகியர்.
பி கு : சுப்ரமணிய ஸ்வாமியுடன் நேருக்கு நேர் நடந்த விவாதத்தில் அரங்கமே ஸ்வாமிக்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருக்க, தன் அரசீற்றத்தால் அவரை பந்தாடிய பிரகாஷ் ராஜ், நிஜ ஹீரோக்களில் ஒருவர்.

கருத்துகள் இல்லை: