இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு போன்ற மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் மருத்துவ நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம். தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம். கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
திட்டமிடப்படாத தடுப்பூசி திட்டம் உருமாறிய கொரோனாவை தூண்ட வழிவகுக்கும். அதிக அளவில் கொரோனா தொற்று பரவும் இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக