திங்கள், 7 ஜூன், 2021

திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்! ( மாமூல் கேட்டு மிரட்டிய மயிலை திமுக நிர்வாகி பாலு)

 மாலைமலர் :கட்டுமான நிறுவன பணியில் தலையிட்டதாக மயிலாப்பூர் பகுதி தி.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கிழக்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருப்பவர் ஆர்.பாலு.
இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் கட்டுமான பணிகளில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் செய்தனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ஆர்.பாலு கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: