வெள்ளி, 13 டிசம்பர், 2019

Self policing.- won't be a victim anymore ... பெண்கள் பாதுகாப்பு ..

Devi Somasundaram : பெண்கள தங்கள பாதுகாத்துக் கொள்ள சில dos and don't s .
1 . எப்பவும் அலர்டா இருங்க .தனியா இருட்டான பகுதில போக வேண்டிய அவசியம் நேர்ந்தா நம்மை சுற்றி அட்லிஸ்ட் 10 அடி தூரத்திற்குள் யாரும் இல்லன்றத உறுதி செய்துக் கொள்ளுங்கள் .
2 . மிக குறைந்த தூரத்திற்குள் யாரும் வரும் வரை அனுமதிக்காம டிஸ்டன்ஸ் அதிகமாக்குங்க ..அது எளிதா நம்மை ஒருவர் பிடிப்பதை தடுக்கும்.
3 . தனியா போக வேண்டிய இருட்டான பகுதிக்கு முடிந்த வரை நாலைந்து பெண்களா போக முயற்சி செய்ங்க ..முடியாத போது போவதை தவிர்க்க என்ன வாய்ப்பு இருக்குன்னு யோசிங்க..உதாரணமா இருட்டு அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்ல வண்டி இருந்தா ஆண் நண்பர் கிட்ட சொல்லி மேல எடுத்து தரச் சொல்லலாம் .. நைட்ல பஸ்ல இறங்கி தனியா நடக்கனும் என்றால் அந்த பக்கம் போக இருக்கும் சக பயணி கூட சேர்ந்து போகலாம். அந்த மாதிரி மாற்று வழியும் இல்லாத போது முடிந்த வரை இருட்டில் இல்லாமல் வெளிச்சத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள் ..அது எதேச்சையான உதவிக்கு வழி செய்யும் .

3 .அதிகாலை இருளில் நடந்து பயணிக்க அவசியம் நேர்ந்தால் உதாரணமா டிரைன்ல வந்து புரியாத புது இடத்தில் இறங்கி ஒரு இடத்துக்கு போக நேர்ந்தால் விடியும் வரை ஸ்டேஷ்ன்லயே இருந்து விடிந்து கிளம்பலாம்...ஸ்டேஷன் மாஸ்டர் அறைல லைட் எரியும்..டீ விற்பவர் , பேப்பர் விற்பவர்ன்னு கூட்டம் இருக்கும்... ஸ்டேஷன் வெளிச்சமா இருக்கும்..தவறு செய்பவர்க்கு வெளிச்சம் பயத்தை தரும்... விடிந்ததும் ஆட்டோவோ பஸ்ஸோ பிடித்து கிளம்பிவது பாதுகாப்பை உறுதி செய்யும்..
4 . ஆண் மட்டும் இருக்கும் ஆட்டோ, டாக்ஸி இவற்றை இரவில் தவிர்த்து விடுங்கள் ..யார் நல்லவர் யார் கெட்டவர் என்று முகத்தில் எழுதி இருக்க வாய்ப்பில்லை .
5 . இத்தனை எச்சரிக்கையா இருந்தும் யாரிடமும் மாட்ட நேர்ந்தால் முதலில் பதட்டமடையாமல் இருங்கள் . எதிரிக்கு நம் பதட்டம் பலம்..நமக்கு பலவீனம்.
6 . எதிரியை பதட்டமடையச் செய்ய சில வழிகள் .முடிந்த வரை சத்தமா குரல் எழுப்பலாம்...அது உதவி கிடைத்து விடும் என்ற பதட்டத்தில் எதிரி பதட்டமடைவான்..அந்த பதட்டத்தில் அவன் செய்யும் தவறை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
நம் சத்தத்தை நிறுத்த நம் வாயை மூட அவன் முயல்வான்..ஒன்று வாயை கையால் அடைப்பது .அல்லது நம்மை தலையில் தாக்குவது
வாயை அடைக்க கிட்ட வரும் தருணத்தை நாம் பயன்படுத்தலாம் ..அவன் கவனம் நம் வாயில் இருக்கும் அந்த கவனச் சிதறலை பயன்படுத்தி நம் முழங்காலால் அவன் ஆணுறுப்பில் வேகமா இடிக்கலாம் ..நெஞ்சு கூட்டில் இடிக்கலாம் . அவன் முழங்காலில் மிதித்தால் கூட கீழே விழுவான்...நாம் அந்த இடத்தை விட்டு ஓட நமக்கு வாய்ப்பு கிடைக்கும் ..
தலையில் அடிக்க அவன் எதும் ஆயுதத்தை தேடும் அந்த நொடியும் அவன் கவனம் சிதறும் . அவனை தாக்க நாமும் ஆயுதம் தேடலாம் .அல்லது .அந்த இடத்தை விட்டு ஓடலாம்.
7 . ஓடும் போது பழகின ஊராய் இருந்தால் அருகில் எங்க மனித நடமாட்டம் அதிகம் இருக்கும்னு யோசித்து அந்த இடத்தை நோக்கி ஓடனும்..
8 . வெளிச்சம் இருக்கும் இடம் நோக்கி ஓடனும் .வெளிச்சம் குற்றம் செய்ய நினைப்பவரை பயமுறுத்தும் ..மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர் செய்யும் தவறுகளை நாம் பயன்படுத்துக் கொள்ளனும் .
9 .முடிந்த வரை ஓடனும் .அது நம்மை துரத்துபவரை டயர்ட் ஆக்கும் .அவர் பயத்தோடு துரத்துவார் ... அவர் டயர்ட் ஆவது நமக்கு கிடைக்கும் வாய்ப்பு
10 . ஒன்றுக்கு மேற்பட்ட நபரிடம் சிக்கும் போது அவர்களுக்குள் ஒற்றுமையை உடைக்க முயலனும்..அதில் ஒருவரை தெரிந்த மாதிரி காட்டி உனக்கு பணபலம் இருக்கு தப்பிச்சுடுவ .அந்த தைரியத்தில இவனுகள எல்லாம் மாட்டி விடறியே .போலிஸ் உன்னை விட்றும் .உன் ஆசைக்கு இவனுகள பலி ஆக்குற ..இந்த மாதிரி பயமுறுத்தலாம்.. குழப்பத்தில் கிடைக்கும் சிறு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து ஓட பயன்படுத்தலாம்.
11. முடிந்தவரை முழுங்காலால், கைகளால், தலையால் ஆணின் உறுப்பை தாக்குவது அவனை நிலைகுலைய செய்யும். .நாம் ஓட சந்தர்ப்பம் கிடைக்கும்.
..எனக்கு தெரிந்தத எழுதி இருக்கேன்..
#தேவி.

கருத்துகள் இல்லை: