திங்கள், 9 டிசம்பர், 2019

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்திய குடியுரிமை இல்லை? ராஜ்நாத் விளக்கம்

Velmurugan P - /tamil.oneindia.com :  டெல்லி: இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். 
அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது, இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. 
 ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. மதசார்ப்பற்ற கொள்கை மதசார்ப்பற்ற கொள்கை மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 
 
இந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
 இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்

கருத்துகள் இல்லை: