
கடைசிக்கட்ட பிரசாரத்தின்போது கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.
அதனை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இருந்தன. பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தொழிலாளர் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.
ஸ்காட்லாந்து தேசிய கட்சியானது, தொழிலாளர் கட்சி வசம் இருந்த ரூதர்கிளன், ஹாமில்டன் மேற்கு ஆகிய தொகுதிகளையும், கன்சர்வேடிவ் கட்சி வசம் இருந்த ஆங்கஸ் தொகுதிகளையும் கைப்பற்றியது.
டார்லிங்டன் உள்ளிட்ட சில தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சியானது தென்மேற்கு லண்டனில் புட்னி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார். போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக