புதன், 11 டிசம்பர், 2019

நித்யானந்தா பதுங்குகுழியில் ? ரஞ்சிதாவிடம் விசாரியுங்கள்!’ - முன்னாள் சீடர் விஜய் நித்தியானந்தா

விஜய நித்யானந்தாவிஜய நித்யானந்தா `நித்யானந்தா பதுங்குகுழியில் இருக்கலாம்; ரஞ்சிதாவிடம் விசாரியுங்கள்!’ - முன்னாள் சீடர் vikatan.com - எஸ்.மகேஷ் `சர்ச்சை சாமியார் நித்யானந்தா, ஆசிரம பதுங்கு குழியில் தங்கியிருக்கலாம் என்றும் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரித்தால் அவர் குறித்த தகவல்கள் கிடைக்கும்' என்றும் சீடர் விஜய நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைத் தேடிவரும் நேரத்தில் அவர் குறித்த தகவல்களைத் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார் என்கிற விஜய நித்யானந்தா என்ற சீடர், தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ``2009-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்துக்குச் சென்றேன். அங்கு நித்யானந்தாவைச் சந்தித்தேன். என்னுடைய பணம், தங்கத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக மாற்றித் தருவதாக நித்யானந்தா கூறினார். அதை முழுமையாக நம்பி என் குடும்ப சொத்துகளை இழந்தேன்.

அதன் பிறகு இழந்த சொத்துகளை மீட்க நித்யானந்தா கும்பலிடம் சிக்கினேன். தற்போது பல வழக்குகளில் சிக்கி நிர்கதியாக இருக்கிறேன். திருவாரூர், வேதாரண்யம், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமத்தின் நிர்வாகத்தை கவனித்துவந்தேன். அப்போது, நித்யானந்தா தரப்பினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சட்டரீதியான வழக்குகளைச் சந்தித்து வருகிறேன்.
இருபாலின சேர்க்கையாளரான நித்தி, பார்வதி, பரமசிவன் எனக் கூறி அழகான பெண்களைத் தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கிறார். 2015-ம் ஆண்டு நித்யானந்தாவுடன் மிகவும் நெருங்கிப் பழகிய என்னையும் நண்பர்களையும் அழைத்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டார். இதனால்தான் நித்யானந்தாவின் உருவத்தை என் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டேன். எனக்கு பெங்களூரு பகுதியில் உள்ள மாடலிங் பெண்களுடனும் ஜிம் பயிற்சியாளர்களுடனும் பழக்கம் இருந்தது. அவர்களை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

நித்யானந்தாவின் ஆசிரம ராஜ மாதாவாக நடிகை ரஞ்சிதா இருக்கிறார். ராணிபோல அவர் ஆசிரமத்தில் உள்ளார். முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பது நடிகை ரஞ்சிதாவின் வேலைதான். அவரை அம்மா என்று அழைக்கக் கூடாது. அக்காள் என்றுதான் அழைக்க வேண்டும். மா நித்தி ஆனந்த மயி என்பதுதான் ரஞ்சிதாவின் பெயர். அவரின் கண் அசைவு இல்லாமல் ஆசிரமத்தில் எதுவும் நடக்காது. என்னை நேரடியாக ரஞ்சிதாதான் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுவார்.

லைவ் வீடியோவில் நித்யானந்தா பயன்படுத்தும் பொருள்களைப் பார்க்கும்போது அவை பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்தவை எனக் கூற முடியும். அங்குள்ள பாதாள அறையில் இருந்துகொண்டு நித்தி வீடியோ கிராபிக் மூலம் வெளிநாட்டில் இருப்பதாக நாடகமாடுவதாக சந்தேகம் உள்ளது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. நித்தி அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தைத் தள்ள வேண்டும் என்றால்கூட 10 பேர் வேண்டும். நித்யானந்தாவின் உருவத்தை என் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டேன்.
எனக்கு பெங்களூரு பகுதியில் உள்ள மாடலிங் பெண்களுடனும் ஜிம் பயிற்சியாளர்களுடனும் பழக்கம் இருந்தது. அவர்களை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்றால் அவருடன் இருப்பவர்களை விசாரித்தால் போதும். நித்யானந்தா இந்தளவுக்கு லைவ் வீடியோவில் வருகிறார் என்றால், அவர் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு ஆசிரமத்திலிருந்தப்படி வீடியோ கிராபிக் மூலம் ஏமாற்றிவருகிறார். எனவே, அரசும் போலீஸாரும் பிடதி ஆசிரமத்தை முழுமையாக சோதனை செய்வதோடு, ஆசிரமத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தால் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரிந்துவிடும்" என்றார்.

கருத்துகள் இல்லை: