சனி, 14 டிசம்பர், 2019

போருக்கு அழைக்கிறதா சமஸ்கிருதம்? ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசியது ஏற்புடையதா?

சமஸ்கிருத சட்ட வரைவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆ. ராசா ஆற்றிய உரையானது மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடி முழக்கத்திற்கு ஒப்பானது .
இந்திய உபகண்டத்தில் ஆரிய வடமொழியும் திராவிட குடும்ப மொழிகளும் எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது , அவற்றின் வரலாற்று சான்றுகள் பற்றிய விளக்கமான உரையாகும் .
எனக்கு தெரிந்த வரையில் இந்திய நாடாளுமன்றம் இது போன்ற ஒரு தெளிவான விரிவான ஆணித்தரமான ..எல்லாவற்றிகும் மேலாக ஒரு வீரம் மிக்க உரை இது என்று கூறலாம்.
உண்மையில் இது ஒரு போர் முழக்கம்தான்.
சம்ஸ்கிருத ஆரிய மேலாண்மைக்கு எதிராக ஒரு போர் புரியவேண்டிய நிலைக்கு திராவிட மொழிக்குடும்பம் தள்ளப்பட்டு விட்டது.
இதை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டிய நிலை இன்று உள்ளது.
இந்த உண்மையை முழு இந்தியாவும் உணர்ந்து இருந்தாலும் .
முன் எப்போதும் இல்லாத அளவில் ஆரிய சம்ஸ்கிருத சக்திகள் அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து உள்ளது.
இந்த ஆரிய சம்ஸ்கிருத சக்திகள் சமுகத்தின் எல்லா தரப்பினருக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
அந்த ஆரிய சமஸ்கிருத சக்திகள் ஏறக்குறைய ஆரிய ஹிட்லரின் நாசி தத்துவத்திற்கு இணையானது.
முதலில் மாற்று மதங்கள் . அடுத்தபடி மாற்று மொழிகள் . அதற்கு அடுத்தபடி ஜாதீய அடுக்குகள் அதற்கும் அடுத்த படி பெண்கள் .. இப்படியாக ஒரு ஆணாதிக்க பார்ப்பன பனியா மேலாதிக்கத்தை உள்நோக்கமாக இந்த சம்ஸ்கிருத ஆரிய மேலாதிக்கம் கொண்டுள்ளது.

இந்த போரை இன்று எதிர்கொள்ள தவறினால் நாளை மிகபெரும் அழிவு காத்திருக்கிறது.
வரலாறு முழுவதும் இது போன்ற நிகழ்வுகள் கூறும் உதாரணங்கள் தாராளமாக உண்டு .
இதை மிக சரியாக திராவிட முன்னேற்ற கழகமும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றே கருதுகிறேன்.
தென்னாட்டை தாண்டி முழு இந்திய உபகண்டத்திலும் உள்ள மண்ணின் மைந்தர்களின் குரலாக திரு ஆண்டிமுத்து ராசா அவர்கள் பேசி உள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

கருத்துகள் இல்லை: