வெள்ளி, 13 டிசம்பர், 2019

மாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை

குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள்பட 4  மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை தினதட்ன்ஹி : திருச்சி கிறிஸ்டோபர் குழுவில் இருந்த 30 பேரிடம் இன்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை, உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.
இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இதைவைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தமிழகத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் பட்டியலில் சென்னை மாநகரம் முதல் இடத்தை பிடித்தது.

;குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்ந்த  மற்றும் பதிவிறக்கம்  செய்தவர்களை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கிறிஸ்டோபர் அல்போன்சை நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து திருச்சி  போலீசார் கைது செய்தனர்.  ;“நிலவன் நிலவன்” என்ற முகநூல் பக்கத்தை தொடங்கி, அதில்   குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிடுவதை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருவதாகவும், தான் அதற்கு அடிமையாகி விட்டேன் என்றும் போலீசிடம், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட  கிறிஸ்டோபர் அல்போன்சை  வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  கைதான கிறிஸ்டோபரின் சமூக வலைத்தள குழுவில் இருந்த 30 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். அரசியல் பிரமுகர்கள் உள்பட 30 பேரை வரவழைத்து இன்று விசாரிக்க திருச்சி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதற்கு மத்தியில்,  சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த  4  மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளன

கருத்துகள் இல்லை: