புதன், 11 டிசம்பர், 2019

புதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழர் வரவேற்கிறார்கள்?

முன்னாள் இந்நாள் புலி ஆதரவு புலம்பெயர்ந்தோர் பலரும் தற்போது பாஜகவின் அசைக்க முடியாத ஆதரவாளர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள் ..
கொஞ்சம் சுயமாக சிந்திக்க கூடியவர்கள் மட்டுமே பாஜகவின் இந்துத்வா பாசிசத்தை பற்றி புரிந்து கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது .
இதை விட முக்கியாமன அதிர்ச்சி அளிக்கும் விடயம் .. பாஜகவின் புதிய குடியுரிமை சட்ட வரவை இவரகள் பெரிதும் வரவேற்கிறார்கள் .
இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய் குடியுரிமை வழங்க படமாட்டாது என்ற விடயத்தைகூட மிகவும் அழுத்தமாக ஆதரிக்கிறார்கள் .. ஆனால் அதை வழக்கம்போல வெளிப்படையாக தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .
அது மட்டுமல்ல பதிலுக்கு இந்த சட்டவரைவுக்கு எதிராக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழங்குவதை கூட ஒரு வித நமுட்டு சிரிப்போடுதான் எதிர்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களும் இலங்கையில் உள்ள தமிழர்களும் எப்போதும் ஒரு நெருக்கடிக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் .இந்த் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் ஒரே நோக்கம் .
அப்போழுத்தானே அவர்களின் வண்டில் ஓடும் ?
தாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூக்குரல் போடுகிறோம் என்று காட்டுவதற்கு தொடர்ந்து அந்த மக்களின் எந்த பிரச்சனையும் தீர்ந்து விட கூடாதே ?
ஈழத்தமிழர்கள் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களாகவே தொடரவேண்டும்.என்ற எண்ணத்தில் தங்கள் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்று கருத வேண்டி உள்ளது . 

தங்கள் பிம்பத்தை தொடர்ந்து தக்க வைக்க மக்களை மனித கேடயாமாக பயன்படுத்துவது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே ?

அவர்கள் சார்ந்துள்ள மக்கள் சதா நெருக்கடிக்குள் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் அகதியாகவே இருக்க வேண்டும் என்று உலகத்தில் யாரவது உண்மையிலேயே விரும்புகிறார்கள் என்றால் அது இந்த புலம் பெயர்ந்த புலி  ஆதரவாளர்கள்தான்.

கருத்துகள் இல்லை: