வெள்ளி, 13 டிசம்பர், 2019

அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து!

Japanese PM cancels visitnakkheeran.in - ஆதனூர் சோழன் : அசாமில் மோடியும் ஜப்பான் பிரதமரும் அபேயும் சந்தித்து பேச இருந்த இடத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீவைத்ததால் ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.;
பாஜக கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரை சுட்டுக் கொன்று மிரட்டும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனாலும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். வரும் 15 ஆம் தேதி முதல் 17 தேதிவரை அசாம் தலைநகர் கவுகாத்தியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்கள்.

அவர்கள் சந்திக்கும் நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். அங்கு கட்டப்பட்ட சில கட்டுமானங்களை தீவைத்து கொளுத்தினார்கள். இதையடுத்து, இந்தச் சந்திப்பை வேறு இடத்துக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், ஜப்பான் அரசு இந்த சந்திப்பையே ரத்து செய்துவிட்டது

கருத்துகள் இல்லை: