ஞாயிறு, 8 டிசம்பர், 2019

கேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு ... பிஷப் பிராங்கோவை தொடர்ந்து Catholic priest booked in Kerala for raping woman: Police

A Catholic priest in Kerala was booked on Wednesday for allegedly raping a woman in Kozhikode in June 2017, police said. The accused, Fr Manoj alias Jacob Plakoottathil, belongs to the Diocese of Thamarassery. After the incident, the victim had initially lodged a complaint with Bishop Remigiose Inchananiyil. According to the complaint, the priest had gone to the woman’s house when she was alone and sexually assaulted her. Subsequently, he also threatened her, it said
கன்னியாஸ்திரி லூசி களப்புரா`பிஷப் பிராங்கோவைத் தொடர்ந்து பாதிரியார் மனோஜ்!' - கேரளாவை அதிரவைத்த அடுத்த பாலியல் புகார்
சிந்து ஆர் vikadan :  தாமரசேரி மறை மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், போலீஸில் புகார் அளித்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விகடன் : கேரள மாநிலத்தில், பாதிரியார்கள் மீதான தொடர் பாலியல் புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.
பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில், திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டது குறித்து பாவமன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார், இளம்பெண் ஒருவர். அந்தப் பெண்ணின் கதையைக் கேட்ட பாதிரியார், `உன் கணவரிடம் கூறிவிடுவேன்' என மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மடத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில், பாலியல் புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள்மீது சபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. சபையிலிருந்து நீக்கப்பட்ட கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய `கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து, வயநாடு மாவட்டம் கல்பற்ற பகுதியில் கன்னியாஸ்திரி லூசி களப்புரா தங்கியிருக்கும் மடத்தின்மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் குடும்பப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைகொடுத்த பாதிரியார் மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேவாயூர் திருச்சபையில் பாதிரியாராக இருந்த சமயத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதால் புகார் அளிக்க தாமதமாகிவிட்டது எனவும் அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார்.


கன்னியாஸ்திரி லூசி களப்புரா
பாதிரியாரின் பாலியல் தொல்லைகுறித்து கணவரிடம் கூறியதாகவும், முதற்கட்டமாக தாமரசேரி மறை மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் போலீஸில் புகார் அளித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிரியார் மனோஜ் மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பாதிரியார் மனோஜ், தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
பெண்ணின் புகாரையடுத்து, பாதிரியார் மனோஜை சபை பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டதாக, தாமரசேரி மறைமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதிரியார் மீது பெண் கொடுத்த பாலியல் புகார் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: