சனி, 14 டிசம்பர், 2019

பரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப்பு!


jknakkheeran.in - ஆதனூர் சோழன் : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த கையோடு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் பலரை மத்திய பாஜக அரசு சிறை வைத்தது. காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேக் அப்துல்லாவின் மகனான பரூக் அப்துல்லா மூன்று முறை மாநிலத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய மகனும் முதல்வர் பொறுப்பு வகித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி 370 ஆவது பிரிவை ரத்து செய்த பாஜக அரசு பரூக் அப்துல்லாவை வீட்டிலேயே சிறை வைத்தது.

அவருடைய வீட்ட சிறைச்சாலை என்றும் அறிவித்தது. பிஎஸ்ஏ என்ற பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவரை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை விசாரணையில்லாமல் சிறை வைக்கலாம். ஆனால், நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 மாதங்கள் சிறையை நீடித்திருப்பதால், அவர் 7 மாதங்கள் வரை சிறையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் மட்டுமே பிஎஸ்ஏ என்ற சட்டம் அமலில் இருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் என்எஸ்ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டம் அமலில் இருக்கிறது

கருத்துகள் இல்லை: